கோடை காலத்தை சமாளிக்க
கோடைகாலத்தில் சமாளிக்க தினமும் 3 லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு , திராட்சை உட்பட்ட பழங்களை சாப்பிடலாம்.
பகல் நேரங்களில் இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம்.
பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.
முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம் .
வாரம் இரு முறை ஆயில் பாத் எடுத்துக் கொள்ளலாம்.
வெயிலில் போகும் முன் சன்ஸ்கிரீன் லோசன் அரைமணி நேரம் முன்பாக தடவிச் செல்லுங்கள் .
கோடைகாலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
டிபன் எட்டு மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி ஆறு மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.
வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் உடன் கொண்டு செல்வது அவசியம் .
காரம் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
அலுவலகத்திற்கு செல்பவர்கள் சீராக தண்ணீரை பருகினால் வெப்பத்தினால் ஏற்படும் தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.
குளிர்ந்த நீரை குடிக்க நினைப்பவர்கள் பானையில் ஊற்றி வைத்து குடிப்பதால் உடல் நலத்திற்கு எந்த கேடும் ஏற்படாது.
கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது அவசியம்.
அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது அல்லது குறைத்துக் கொள்வது உடல் நலத்தை காக்கும்.