காமராஜர் ஆட்சியில் மலையை குடைந்து அருமையாக கட்டப்பட்டது குந்தா அணைக்கட்டு.
அப்போது அவரை சந்தித்த அதிகாரி ஒருவர் மலையை குடைந்து அருமையாக கட்டப்பட்ட அணையைப் பற்றி நாமே மக்களிடம் சொல்வதைவிட திரைப்படமாக எடுத்துக் காண்பித்தால் பாமர மக்களுக்கும் சுலபமாக புரியும் என்றார்.
அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார் காமராசர் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றார் அதிகாரி.
அடப்பாவிகளா 3 லட்சமா அந்த 3 லட்சம் இருந்தால் 10 ஊர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுப்பேன்.
பிள்ளைங்க படிக்க வழியை காணாம்.
அரசு செய்ததை நியூஸ் ரீல் காட்டுவது என் சாதனை இல்லை அதை வெளிச்சம் போட்டு காட்ட பாக்கிறீங்களா ?என்று சொல்லி மறுத்துவிட்டார் காமராசர்.