மருத்துவ குணம் கொண்ட விதைகள்
முருங்கை விதைகள்
முருங்கை விதைகளை நன்றாக காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம்.
முருங்கைக்காயுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி, சி, விட்டமின் சத்துக்கள் உள்ளன.
கொழுப்பை குறைக்க புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்.
இதயத்தை பலப்படுத்தி ரத்த சோகையை நீக்க உதவும் .
எள் விதைகள்
எல் விதைகளை நல்லெண்ணையயிலாக, எல்லை பொடி செய்தோ சாப்பிடலாம்.
மெக்னீசியம், தாமிரம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, துத்தநாகம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன .
உயர் இரத்த அழுத்தம் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்.
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் சமையல் எண்ணையாக பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் சுவையுடைய இதனை பருப்பு போலவே மென்று சாப்பிடலாம்.
இதில் அதிகம் உள்ள நியாசின், வைட்டமின் ஈ ,ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.
கால்சியம், இரும்பு, மிட்நீசியம், துத்தநாகம் ,மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
சப்ஜா விதைகள்
சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
சப்ஜா விதைகளில் துத்தநாகம்,சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இது பித்தம், உடல் சூடு, செரிமான பாதையில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை வராமல் காக்கும்.
பூசணி விதை
பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளன.
மேலும் மாங்கனிசு, பாஸ்பரம் ,மக்னீசம் தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய சத்துக்கள் நிறைவாக உள்ளன .
நூறு கிராம் பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளை பெறலாம்.