தனிமையில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்யலாம்
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய வேலைகளின் காரணமாக வெளியே சென்று இருக்கும்போது சில மணி நேரங்கள் நீங்கள் தனிமையில் இருக்கு நேரிடும்.
அந்த தனிமையை இனிமையாக்கி கொள்வதற்கு சில வழிகள் இங்கே:
தனிமையில் செய்யும் வேலைகள்
சமையலறை
உங்கள் சமையல் அறையை சுத்தப்படுத்தலாம்.
அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றை நன்றாக சுத்தம் செய்து துடைத்து வைக்கலாம்.
அலமாரிகளின் அடுக்குகள் மேல் போடப்பட்டிருக்கும் காகிதங்களை மாற்றிவிட்டு புதியவற்றை போடலாம்.
டப்பாக்களில் கொட்டி வைத்திருக்கும் மளிகை பொருட்களில் ஏதேனும் பூச்சி இருந்தால் வெயிலில் உணர்த்திவிட்டு எடுத்து வைக்கலாம்.
அடுப்பு தட்டுகளில் இருக்கக்கூடிய கரைகள் போகும்படி அழுத்தி தேய்த்து கழுவி பளபளவென மாற்றலாம் .
அறைகள் தூய்மை
வீட்டில் பயன்படுத்தாத வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தலாம்.
அறைகளில் உள்ள தூசிகளை நீக்கி சுத்தப்படுத்தலாம்.
புத்தகம் படிக்க
புத்தகம் படிப்பதற்கு ஏற்ற நேரமாக உங்களின் தனிமையை பயன்படுத்திக் கொள்ளலாம் .
கதைகள், நாவல்கள், கவிதைகள் போன்றுவற்றை படிப்பதன் மூலம் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
திறமைகளை வளர்க்கக்கூடிய புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
குறிப்பாக நீங்கள் போட்டித் தேர்வுகள் எழுத முற்படுவதாக இருந்தால் தனியாக இருக்கும் நேரத்தில் படிக்கும் போது மனதில் ஆழமாக பதியும்.
செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள் வளர்க்கிறீர்கள் என்றால் அவர்களின் கூடுகளை அல்லது இருப்பிடங்களை சுத்தம் செய்யலாம்.
அவற்றோடு கொஞ்சி விளையாடலாம்.
தோட்டம்
தோட்டத்தில் மேலும் என்னென்ன செடிகள் நடலாம் அல்லது பல செடிகளை நட முடியுமா ?என திட்டங்களை திட்டலாம் .
மாலை நேரங்களில் தோட்டத்திற்கு நீரூற்றலாம்.
இதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் கிடைக்கும்.
உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரமாக தனிமை நேரத்தில் உபயோகிக்கலாம்.
மேக்கப்
மேனிக்கியூர் , பெடிக்கியூர் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது போன்றவற்றை செய்து கொள்ளலாம்.
நன்றாக நேரம் செலவழித்து நிதானமாக குளித்து முடிக்கலாம்.
பேசுதல்
வேலை பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் ஆக குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது இந்த தனிமையை பயன்படுத்தி உறவுகளோடு நிதானமாக அலைபேசியில் அரட்டை அடிக்கலாம்.
தூக்கம்
இனி என்ன செய்யலாம் என்பது யோசிக்காமல் எந்த இடையூறும் இல்லாமல் நிம்மதியாக சிறிது நேரம் தூங்கலாம்.