கரித்துண்டும் மூடநம்பிக்கையும்
கறிக் கூடையில் கரி
கறிக் குழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரிக்கட்டையை வைத்துக்கொண்டு செல்வது நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
அப்படி கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு.
கரிக்கட்டை என்பது கார்பன் C2 ஆகும்.
கறி குழம்பை கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வாசனையை கூடையில் வைத்திருக்கும் வெளியே அனுப்பாது.
மல்லிகை
அதேபோலத்தான் பெண்கள் மல்லிகைப்பூ அதிகமாக பயன்படுத்தினால் ஒரு சிறிய கரிக்கட்டையை அவர்கள் தலையில் வைத்து பயன்படுத்துவதும் வாசனையை வெளியே அனுப்பாமல் இருப்பதற்காக மட்டுமே.
காத்து கருப்புக்காக இல்லை.
பல் துலக்க கரி
இவ்வளவு ஏன் இன்றளவும் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் காலையில் பல் விளக்குவது கரிக்கட்டையிலும் சாம்பலிலும் தான்.
கரியில் உள்ள கார்பன் பல்லில் உள்ள துர்நாற்றத்தை வெளியேற்றும்.
பல்லில் பூச்சியை அண்ட விடாமல் பாதுகாத்துக் கொள்ளும்.
நமது முன்னோர்களின் செயலுக்குப் பின்னால் ஏதேனும் ஓர் அறிவியல் இருக்கத்தான் செய்கிறது.