ரொட்டி வடிவில் இறைவன்
நாட்டின் விடுதலைப் புரட்சி இயக்கம் தீவிரம் அடைந்திருந்த நேரம் மகாத்மா காந்திஜியும் கவியரசி சரோஜினி தேவியும் வேறு பல காங்கிரஸ் தொண்டர்களும் அலிகார் சிறை ஒருநாள் மாலை பொழுது புகழ் உலக புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் பேச்சாளர்களின் கருத்துக்கள் சிலவற்றை நான் கூறுவேன் அதை யாருடையது என்று நீங்கள் கூற வேண்டும் என்று காந்திஜியிடம் சரோஜினி தேவி கேட்டுக்கொண்டார்.
பல்வேறு பொன்மொழிகளை சரோஜினி அம்மையார் சொல்லிக் கொண்டே வர அது கூறியவர்களின் பெயர்களை காந்திஜி சரியாக தெரிவித்து வந்தார்.
கடைசியாக "ஆண்டவன் ஏழைகளுக்கு ரொட்டி வடிவில் காட்சியளிக்கிறான்" என்ற சிந்தனை மிகு பொன்மொழி யாருடையது என கேட்டார்.
காந்திஜி மௌனம் சாதித்தார்.
பின்னர் சரோஜினி தேவி அன்பான புன்சிரிப்புடன் காந்திஜியை நோக்கி உலகத்தை கவர்ந்த இந்த உயர்ந்த சிந்தனை எங்கள் பாரத தேச தந்தை காந்திஜி உடையதாகும் என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார்.