இரத்தம் வேண்டுமாம்...


பொதுவாக வெளவ்வால்கள் சைவம்தான்.

 பழங்கள் மற்றும் கொட்டைகளையே சாப்பிடும்.

 பூச்சிகளை உண்ணும் வெளவ்வால் இனங்களும் உண்டு.

 ஆனால் அமெரிக்க கண்டத்தின் மத்திய பகுதிகளிலும் தென்பகுதிகளிலும் வசிக்கும் சில வகை வெளவ்வால்கள் மட்டும் இரத்தத்தை குடிக்கும் கொடூர மிருகங்களாக இருக்கின்றன.

 இவற்றை பறக்கும் டிராகுலாக்கள் என்று அழைக்கிறார்கள் மக்கள்.

டிராகுலா போல இவை இரத்தத்தை குடிப்பதன் காரணம் என்ன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

 பிறகு வெளவ்வால் இனங்களில் உள்ள ஜீன் கட்டுமானங்களில் 13 ஜீன்கள் இந்த வகை வவ்வால்களில் இல்லாததே காரணமாம்.

இந்த ஜீன் அமைப்பே இரும்புச் சத்தும், புரதச்சத்தும், நிறைந்த குறைவான கொழுப்புசத்துக் கொண்ட கார்போஹைட்ரேட்டே இல்லாத ஒரு ருசியான டயட்டான ரத்தத்தை சுவைக்கும் பழக்கத்தை இந்த பாலூட்டிகளுக்கு கொடுக்கிறதாம்.
 அமெரிக்காவில் உள்ள 1400 வகையான வெளவ்வால் வகைகளில் மூன்று இனங்கள்தான் இப்படி இரத்த வெறி பிடித்து அலைகின்றனவாம்.

 இந்த அமைப்பு சிலவகை எலிகளிடமும் உண்டு என்கிற அதிர்ச்சியான செய்தியை செய்தியையும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

 அமெரிக்காவுக்கு போற ஆசைய என்ன பண்ணறது. 

பாேனால் ஜாக்கிரதையா  இருங்கோ.....

கருத்துரையிடுக

புதியது பழையவை