பிடிக்கவில்லை...!


அத்தையைப் பாராட்டினேன்
சித்தப்பனுக்குப் பிடிக்கவில்லை!

சித்தியை புகழ்ந்து பேசினால்
அண்ணிக்குப் பிடிக்கவில்லை!

மாமனுக்கு நல்லவனாய் இருந்தேன்
மச்சானுக்குப் பிடிக்கவில்லை!

மனைவியைப் பாராட்டினேன்
என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை!

அடுத்த வீட்டுக்காரருக்கு....
நான் நல்லவனாய் தெரிந்தேன்
ஏதிர்வீட்டுக்காரர் எதிரி ஆகிவிட்டார்!

எல்லோருக்கும் நல்லவனாய் 
என்னால் இருக்கவே முடியாதா,,?

அனுபவப் பட்ட ஒரு நண்பர்
             அட்வைஸ் பன்னினார்..!

ஒன்பது நிறங்களில் 
              உங்கள் முகத்தை 
நேரத்துக்கு தக்கவாறு மாற்றுங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு கலரில்
உங்களின் முகத்தையும் பேச்சையும்
மாற்றிக் கொண்டே பழகுங்கள்

மாற்றம்தான் மாறாதது என்றார்,,!

இப்போது வரி வரியாய் தெரிகிறது
                   என் முகமும் முகவரியும்,,,!

இப்போது எல்லோருக்கும் 
                    என்னைப் பிடிக்கிறது

எனக்கு மட்டும் தான் என்னைப்  
                        பிடிக்கவேயில்லை,,!!

கருத்துரையிடுக

புதியது பழையவை