சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்.
=>எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாம மட்டும் தான் எடுக்கலை-னு சொல்லும் பையனின் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க முடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை,
=>அம்மாவை தரக் குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணித் துயரப்படும் கணவர்களின் கண்களை,
=>துரோகத்தைத் தாங்க முடியாமல் காதலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நானென்ன செய்தேன் என்று அழுது கெஞ்சிக் கொண்டிருக்கின்ற காதலனின் கண்களை,
=>கடன்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்கிற மகனின் தாழ்வானக் குரலுக்கு பதில் தர முடியாமல் கூனிக் குறுகும் குடும்பத் தலைவனின் கண்களை,
=>தன்னை விட சிறியவனின் திருமணத்தில் உனக்கு அடுத்தது எப்போ? என்றக் கேள்வியை எதிர்க்கொள்ளும் முதிர்கண்ணனின் கண்களை,
=>வரிசையில் நிற்கும் போது தன்னை முந்திச் செல்லும் வலியவனிடம் எதிர்த்து பேசத் திராணியில்லாமல் விட்டுக் கொடுக்கும் அப்பாவியின் கண்களை,
=>சரியாக உண்ணும் போது இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலை கிடைக்காமல் இப்படியே இருப்பாய் என்ற தந்தையின் நக்கலுக்காக பாதியில் எழுந்துச் செல்லும் வேலையில்லா பட்டதாரியின் கண்களை,
=>உச்சி வெயிலில் மேல் சட்டை இல்லாமல் சாலை வேலை செய்யும் ஒருவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உட்கார்ந்த வேளையில் மேலாளரின் அதட்டல் சத்தம் கேட்டு எழுந்துப் போகின்ற சாமனியனின் கண்களை,
=>இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி குடும்பத்தை ஓட்ட முடியும் என்று நினைத்துத் தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை,
=>எப்போதும் உற்று நோக்காதீர்கள்
அப்படிப் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக கரைந்துப் போவீர்கள்.
>>ஆண்களின் அழுகையில் மென்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக உண்மை இருக்கும்