*"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்...*
*வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது...*
1. கொஞ்சம் *"சும்மா"* இருடா?
*(அமைதியாக / Quiet)*
2.கொஞ்சநேரம் *"சும்மா"* இருந்துவிட்டுப் போகலாமே? *(களைப்பாறிக் கொண்டு / Leisurely)*
3.அவரைப் பற்றி *"சும்மா"* சொல்லக் கூடாது!
*(அருமை / infact)*
4.இது என்ன *"சும்மா"* கிடைக்கும் என்று
நினைத்தாயா?
*(இலவசமாக / Free of cost)*
5. *"சும்மா"* கதை விடாதே?
*(பொய் / Lie)*
6. *"சும்மா"* தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்.
*(உபயோகமற்று / Without use)*
7. *"சும்மா", "சும்மா",* கிண்டல் பண்ணுகிறான்.
*(அடிக்கடி / Very often)*
8. இவன் இப்படித்தான், *சும்மா* சொல்லிக்கிட்டே இருப்பான்.
*(எப்போதும் / Always)*
9.ஒன்றுமில்லை *"சும்மா"* தான் சொல்லுகிறேன்-
*(தற்செயலாக / Just)*
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா"* தான் இருக்கின்றது.
*(காலி / Empty)*
11. சொன்னதையே *"சும்மா"* சொல்லாதே.
*(மறுபடியும் / Repeat)*
12. ஒன்றுமில்லாமல் *"சும்மா"* போகக்கூடாது .
*(வெறுங்கையோடு / Bare)*
13. *"சும்மா"* தான் இருக்கின்றோம்.
*(சோம்பேறித்தனமாக / Lazily)*
14. அவன் *"சும்மா"* ஏதாவது உளறுவான்.
*(வெட்டியாக / Idle)*
15. எல்லாமே *"சும்மா"* தான் சொன்னேன்.
*(விளையாட்டிற்கு / Just for fun)*
*நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த *"சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை