இப்படியும் பாதுகாக்கலாமா...?

மழைக்கால செடிகள் பராமரிப்பு
காலநிலைக்கு ஏற்றவாறு உயிர்களின் இயல்பில் மாற்றம் ஏற்படும். அது போலவே செடி, கொடிகளின் இயற்கை தகவமைப்பும் பருவ காலத்துக்கு ஏற்றவாறு மாறுபடும்.


=>தோட்டங்களில் செடிகளுக்கிடையே சீரான இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

>>மழைக்காலத்திற்கு முன்பே நிலத்தில் நடப்பட்டிருக்கும் தாவரங்களுக்கு, சரியான முறையில் பாத்தி அமைக்க வேண்டும். 

=>இதன் மூலம் மழை நீர் அதிக அளவு தேங்கி, செடிகள் அழுகுவதைத் தடுக்கலாம்.

>>செடிகள் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில், தண்ணீர் தேங்காமல் இருக்க தொட்டிகளின் கீழ் புறத்தில் துளைகள் ஏற்படுத்துவது அவசியமானது.

=>தொட்டியை நேரடியாக தரையில் வைக்காமல் கற்களால் மேடை போன்று அமைத்து, அதிகப்படியான தண்ணீர் வழிந்தோடும் வகையில் செய்ய வேண்டும்.
>>வேர்ப்பகுதியில் உள்ள மண் பரப்பில், மஞ்சள் தூள் தூவுவதன் மூலம் செடிகளை கிருமிகளின் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

>>மழைக்காலங்களில் செடிகளில் ஈரப்பதம் இயற்கையாகவே இருக்கும் என்பதால், சரியான அளவு உரமிட்டு நன்றாக பராமரித்தால், பூ மற்றும் காய்கள் அதிக அளவில் கிடைக்கும்.

=>அதிக மழை மற்றும் காற்று ஆகியவற்றால் சாய்ந்த கிளைகளை, கயிற்றைக் கொண்டு கட்டு வதன் மூலம் செடிகள் சேதமடைவதைத் தவிர்க்கலாம்.

=>மிகவும் மென்மையான செடிகளாக இருந்தால் அவற்றை மழைக்கு முன்னரே பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது சிறந்தது.

கருத்துரையிடுக

புதியது பழையவை