அமைதி அமைதி அமைதியோ அமைதி

அமைதி அமைதி அமைதியோ அமைதி

இன்றைய காலகட்டத்தில் அமைதி என்பது பகை இல்லாமல் நிம்மதியாக வாழ்வது என்று மாறிவிட்டது.

உலக நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்த 1981-ம் ஆண்டிலிருந்து 'உலக அமைதி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. 

2002-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 21-ந் தேதி உலக அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் பலவகையான கருத்து வேறுபாடுகளால் மோதல்கள் ஏற்படுகின்றன. 

இவற்றால் குடும்பம், நண்பர்கள், அன்புக்குரியவர்கள் என பலர் பாதிக்கப்படுகிறார்கள். 

விஞ்ஞானம் மனிதர்களை இணைக்க பல வழிகளை உண்டாக் கினாலும் நாம் இணைவது இதயத்தின் மூலமாகத் தான்.

தனிமனித அமைதியே சமூகத்தின் அமைதியையும், உலக அமைதியையும் தீர்மானிக்கிறது. 

ஆயிரம் துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்ற நேர்மறையான எண்ணமே நம் மனதில் அமைதியை உண்டாக்கும். 
இக்கருத்து அனைவரின் மனதிலும் பதிந்து நடை முறையில் வெளிப்படுமானால், உலகில் அமைதி நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை