ப்ளூடூத் இயர் போனை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்

ப்ளூடூத் இயர் போனை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்

 பிரபலமான நல்ல பிராண்டுகளை பார்த்து அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே ப்ளூடூத் இயர் போனை வாங்கவும்.

 மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்கும் தீவிர வெப்ப நிலையில் இவற்றை வைக்க வேண்டாம்.

 அதிக வெப்பநிலை பேட்டரியின் மீது அழுத்தத்தை ஏற்படுவது உடன் இயர் போனை செயலிழக்கவும் செய்யும்.

 அதற்காக கொடுக்கப்பட்ட சார்ஜரை பயன்படுத்தவும்.

 பொருந்தாத சார்ஜரை பயன்படுத்துவது பேட்டரியை சேதப்படுத்தும் .

இதனால் பேட்டரி அதிக வெப்பம் அடைந்து செயல் இழக்கலாம் .

சார்ஜர் செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் அந்த நிறுவனத்தின் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும் .

ப்ளூடூத் இயர் போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு உடனடியாக அதை சார்ஜில் இருந்து எடுக்க வேண்டும் .

அதிக சார்ஜ் செய்வது பேட்டரியை பாதிக்கலாம்.

 ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா ? என அவ்வப்போது சரி பார்க்கவும் .

ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

 பயன்பாட்டில் இல்லாத போது உங்கள் ப்ளூடூத் இயர் போனை நேரடி சூரிய ஒளியில் வைப்பது தவிர்க்க வேண்டும்.

 அரை வெப்ப நிலையில் உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

 பெரும்பாலும் ப்ளூடூத் இயர்போன்கள் வாட்டர் ப்ரூப்பாக வருவதில்லை.

 எனவே அவற்றை நீர் அல்லது  ஈரப்பதமான இடத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

 ப்ளூடூத் இயர்போன்களில் இருந்து அதிகப்படியான வெப்பம், புகை அல்லது விசித்திரமான வாசனை போன்ற ஏதேனும் வெளிப்பட்டால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
 சர்வீஸ் சென்டரை உடனே தொடர்பு கொள்ளவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை