குழந்தைகளுக்கான கோடைகால ஆலோசனைகள்

குழந்தைகளுக்கான கோடைகால ஆலோசனைகள் 
கோடை விடுமுறை வந்து விட்டாலே குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியேறி விளையாடத்தான் விரும்புவார்கள். ஆனால் இந்த வருடம் கோடையின் தாக்கமும், வெப்ப அலைகளின் வீரியமும் சற்று அதிகமாக உள்ளன.

 குழந்தைகளை கோடை வெயிலின் பிடியிலிருந்து பாதுகாக்க சில ஆலோசனைகள்.

 உடலின் குளிர்ச்சி முக்கியம்

 அதீத வெயில் காரணமாக வீட்டுக்குள்ளே இருந்தாலும் கூட உடலின் நீர் சக்தி குறைந்து வறட்சி ஏற்படும் .

இதனை தடுக்க கூடுமானவரை தர்பூசணி, நுங்கு, இளநீர் மற்றும் அதிக அளவில் நீர் கொடுப்பது நல்லது.

 வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் காய்ச்சி தலையில் தேய்த்து குளிப்பது அவசியம் .

பழங்கள், சி வைட்டமின் நிறைந்த பழச்சாறுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்டவைகளின் ஜூஸ்கள் அருந்த வைப்பது நல்லது. 

11 முதல் மூன்று மணி வேண்டாமே

அடப்பிடித்தாலும் கூட பகலில் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளை வெளியே விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

 மேலும் வீட்டில் இருந்தாலும் அவர்களுடன் அதிகம் பேசி வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளை இணைத்து குடும்பமாக விளையாட முயற்சி  எடுங்கள்.

 குழந்தைகள் கோடை விடுமுறையின் தன்மை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் மனநிலை மாற்றங்களையும் தவிர்க்க இது உதவியாக இருக்கும்.

 எண்ணெய் பலகாரங்கள் வேண்டாம் 

எண்ணெயில் பொரித்த உணவுகள், பீசா, பர்கர் உள்ளிட்ட அவசர உணவுகளையும் தவிர்க்கவும்.

 மேலும் சிப்ஸ், சமோசா, அதீத இனிப்பு பதாரங்களையும், உடல் உபாதைகளை உண்டாக்கி வயிற்றுப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும மசாலாக்களும் கூட எரிச்சலை உண்டாக்கும்.

 ஏசியில் நேரத்தை குறைவாக பயன்படுத்துங்கள் 

சில குழந்தைகள் வெளியே வெப்பம் காரணமாக ஏசி பொருத்தப்பட்ட அறையைத் தாண்டி வெளியே வரவே மாட்டார்கள்.

 அவர்களை திசை திருப்பி இயற்கையான காலநிலைக்கும் அரை வெப்பத்திற்கும் பழக்கப்படுத்துங்கள்.

 அதிக ஏசி பயன்பாடு உடலுக்கும் நல்லதல்ல. நம் வருமானத்துக்கும் கூட நல்லதல்ல.

 ஆடைகளில் கவனம் தேவை

இயற்கையான காட்டன் ,உள்ளாடைகள், மெல்லிசான கைத்தறி உடைகள் பயன்பாடு அவசியம்.

 குறிப்பாக ஜீன்ஸ், உலோக பட்டன்கள், டிசைன்கள் பொருத்தப்பட்ட ஆடைகள் நிறைய ஜிமிக்கி கற்கள், சருகை வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை தவிர்க்கவும்.

 இவையெல்லாம் உடலில் வெப்பத்தை மேற்கொண்டு அதிகரிக்கும் .

மேலும் வெப்பத்தை ஏற்கும் திறன் கொண்டவை.

 பள்ளி திறக்கும் நேரம் நெருங்கி விட்டது வெயில் குறைந்தாலும் இன்னும் சில ஊர்களில் வெப்பம் குறையவில்லை .

பள்ளிக்கு செல்லும்போது கூட உணவுகளில் கவனம் தேவை .

அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை கொடுத்து அனுப்புங்கள்.
 ரெடிமேட் உணவுகளை மதிய உணவில் தவிர்த்து விடுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை