அந்த மூன்று நாட்கள்

அந்த மூன்று நாட்கள்

மாதம் தோறும் பெண்கள் அந்த மூன்று நாட்கள் படும் துயரம் சொல்லி மாறாது.

 இந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பெண்கள் அமைப்புகளின் கோரிக்கையானது நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.

 இந்நிலையில் வெளிநாடுகளில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்:

1. ஜாம்பியாவில் பெண்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளை அந்த நாடு தாயார் தினம் என்று அழைக்கிறது.

2. தைவானில் இதற்கு ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும் விடுமுறையை விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம் என்ற அந்த நாடு அறிமுகப்படுத்தி உள்ளது.

3. தென்கொரியாவில் இந்த விடுமுறையை எடுக்காமல். வேலைக்கு வந்தால் கூடுதல் ஊதியம் என அறிவித்தது இதனால் பெண்கள் தங்களது வேதனைகளை மறந்தும் பணிக்கு செல்ல தொடங்கி விட்டனர்.


4. இந்த நாளில் பெண்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஜப்பானில் 70 ஆண்டுகளாக சட்டம் உள்ளது.

5. இந்தோனேசியாவில் இரு நாட்கள் விடுமுறை உண்டு .

6. கன்னடாவில் பெரும்பாலும் நிறுவனங்கள் மாதத்துக்கு ஒரு நாள் விடுமுறை தருகின்றனர்.
7. பிரிட்டனில் விடுமுறை கிடையாது

கருத்துரையிடுக

புதியது பழையவை