சுற்றுலா போகிறீர்களா?

சுற்றுலா போகிறீர்களா?

 போகும்போது கூடுமானம் வரை ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையங்களுக்கு அருகில் தரமான ஓட்டல்களில் அறை எடுத்து தங்குங்கள்.

 சுற்றுலா தளங்களில் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படக்கூடும்.

 அது போன்ற சூழல்களில் தாமதமாக வரும்போது சரியான நேரத்தில் ரயில், பஸ்சை பிடிக்க இது உதவும்.

 லாட்ஜில் அறை புக் செய்யும்போது செக்கின் செக், அவுட் நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 தேவையில்லாமல் பணம் வீணாவதை தவிர்க்கலாம்.

 அறையைத் திறக்கச் சொல்லி அறையில் வசதிகள் எல்லாவற்றையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

 சுற்றுலா செல்லும்போது கையோடு ஒரு பூட்டும், நைலான் கயிரும் எடுத்துச் செல்லவும்.

 விலை உயர்ந்த பொருட்களை அறையில் வைக்கும் போது பூட்ட முடியும் .

அவசரத்துக்கு சில துணிகளை வைத்தால் உலர்த்த முடியும்.

 வெளியூர் டாக்ஸி பயணத்தின் போது டிரைவர் பெயர், அவரின் செல்போன் எண் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

 சில இடங்களில் காரில் இருந்து இறங்கி நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

 திரும்பி வரும்போது வீண் அலைச்சல் இல்லாமல் காரை அருகில் வர வழைத்து ஏற வசதியாக இருக்கும்.

 செல்ஃபி எடுக்கும் போது பத்திரமான இடத்தில் எடுங்கள்.

 அறிமுகம் இல்லாத புதிய இடங்களில் பிற சுற்றுலா பயணிகளை பார்த்து விபரீத முயற்சிகளில் இறங்காதீர்கள்.

 விதிமுறைகளை பின்பற்றுவதே பாதுகாப்பு.

 வீட்டில் இருந்து கிளம்பும்போது குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சிறிதளவு பணம் கொடுத்து வையுங்கள்.

 கூட்ட நெருக்கடியில் எங்கேயாவது தனித்தனியாக பிரிந்து விட்டாலும் யாருக்கும் டென்ஷன் இருக்காது.

 குழந்தைகளை எப்போதும் உங்கள் பாதுகாப்பிலேயே வைக்கவும்.

 புதிய இடங்களில் அவர்கள் உற்சாகமாகி அங்கும் இங்கும் ஓடுவார்கள் என்றாலும் எப்போதும் பார்வை அவர்கள் மீது இருக்கட்டும்.

 வீட்டில் டிவி, ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் , கேஸ் சிலிண்டர்களை ஆப் செய்து விட்டு செல்லுங்கள்.

 பாதுகாப்பாக பூட்டி இருக்கிறோமா? என்பதையும் உறுதி செய்யுங்கள்.

 உங்கள் வீட்டு சாவி ஒன்றை உங்களுக்கு நம்பிக்கையான அருகில் உள்ளவர்களிடம் கொடுத்துச் சென்றால் மின்சார கோளாறு, வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் உடனே உங்கள் வீட்டைத் திறந்து சரி செய்ய முடியும்.

 பயணம் செல்லும் போது கொஞ்சம் பழைய செய்தித்தாள்களை எடுத்துச் சென்றால் அவசரத்துக்கு ரயிலிலோ ? பஸ்ஸிலோ ? கீழே விரித்து அமரலாம்.

 எண்ணெய், பேஸ்ட், ஷாம்பு விரிவுகளை சிறிய பேக்களில் எடுத்துச் சென்றால் தனித்தனியாக ஒவ்வொருவரும் உபயோகிக்கலாம்.

 பெரியவர்கள், குழந்தைகளுக்கு உரிய மாத்திரை மற்றும் மருந்துகள், காட்டன் கொஞ்சம் கைவசம் கொண்டு செல்லுங்கள்.

 செல்போன் சார்ஜுகள், பவர் பேங்க் கண்டிப்பாக எடுத்துச் செல்லவும்.

 ஒரே மாதிரியான பெட்டிகள் பைகளை நிறைய பேர் கொண்டு வரக்கூடும்.

 லக்கேஜ்களில் ஸ்டிக்கர் மாதிரி ஏதாவது ஒன்றை ஒட்டி வைத்தால் உங்கள் பைகள் மாறாமல் இருக்கும்.

 தரமான, சுகாதாரமான உணவுகளை தேடி சாப்பிடுங்கள்.
 வாழைப்பழம், பிஸ்கட் வைத்திருங்கள். உணவு கிடைக்காத போது உதவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை