குக்கர் வெடிக்குமா?

வெடிக்குமா? குக்கர்
வீட்டுக்குள் குக்கர் அறிமுகமாகி நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது சில வீடுகளில் குக்கர் வெடிப்பது குறித்து தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

 இதனால் இளம் வயதினர் குக்கர் பயன்படுத்துவதற்கு அஞ்சும் சூழ்நிலை நிலவுகிறது .

உண்மையில் குக்கர் என்பது அபாயகரமான ஒரு சாதனமே இல்லை.
 ஆகவே குக்கரை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம்.

 ஒவ்வொரு குக்கருக்கும் பராமரிப்புக்கு என கால இடைவெளி உள்ளது.

 ஆகவே எந்த நேரத்தில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்பதை பார்த்து அதனை முறையாக கடைப்பிடித்தாலே எந்த தொந்தரவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

 குக்கர் மூடியில் நீராவி வெளியேறும் வால்வு தெளிவாகவும், சுத்தமாகவும் உள்ளதா? என்பதை எப்போதும் சரி பார்க்கவும்.

 பிரஷர் குக்கரில் எவ்வளவு உணவுப் பொருட்களை நிரப்ப வேண்டுமா? (பொதுவாக மூன்றில் இரண்டு பங்கு அதற்கு மேல் நிரப்பக் கூடாது) உணவு பொருட்களை சமைக்கும்போது அதன் அளவு அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 தண்ணீர் இல்லாமல் பிரஷர் குக்கரை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

 குக்கருக்குள் கேன்கள் போன்ற எவ்விதக் கொள்கலன்களையும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

 அவை உட்புற அழுத்தம் காரணமாக வெடிக்கலாம்.

 பிரஷர் குக்கர் சரியாக மூடப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கவும்.

 அடுப்பில் தீயை அணைத்தவுடன் பிரஷர் குக்கரின் அழுத்தம் தானாகவே நீங்கும் வரை காத்திருங்கள்.

 ஒருபோதும் ஒரு முள் கரண்டியை கொண்டு வால்வை திறக்காதீர்கள்.

 இதனால் நீராவி காரணமாக தீ காயங்கள் ஏற்படலாம் .

பிரஷர் குக்கரின் அழுத்தம் விரைவாக நீங்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றலாம் .

ஆனால் நீராவி வெளியேறும் வால்வில் தண்ணீரை கொட்டி விடக்கூடாது.

 அனைத்து நீர் ஆவியும் வெளியேறும் வரை மூடியை திறக்க வேண்டாம்.

 பிரஷர் குக்கர் அழுத்தத்தை அடையவில்லை என்றால் உடனடியாக வெப்பத்தை அணைத்து அது குளிர்ந்து போகும் வரை காத்திருக்க வேண்டும்.
 இந்த பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்தாலே குக்கர் பற்றிய அச்சம் தேவையில்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை