கிரிக்கெட் வீரர்களின் செல்லப் பெயர்
டோனி
மஹி இது நம் தமிழகத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர்.
மகேந்திர சிங் என்பதே செல்லமாக மஹி என்று அழைத்தார்கள்.
மக்களும் மஹி என்று கூப்பிட தொடங்கி விட்டார்கள்.
ஆனால் டோனியை தல என்று அழைப்பது தமிழகத்தின் ஸ்பெஷல் .
விராட் கோலி
சீக்கு விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது சீக்கு என்று அழைக்க தொடங்கினார்கள் .
பெரிய காதுகளை கொண்ட கோலி ஒருமுறை சார்ட்டாக முடி வெட்டி இருந்தார் .
இதை பார்த்த அவரது டெல்லி பயிற்சியாளர்களில் ஒருவர் முயலைப் போன்று இருப்பதாக கூறி இந்த பெயரைக் கொண்டு அழைத்துள்ளார்.
அது முதல் கோலிக்கு சீக்கு என்று அன்போடு அழைக்கப்படுகிறார் .
ரோகித் சர்மா
ஷானா , ஹிட் மேன் ஷானா என்பது ரோஹித்துக்கு யுவராஜ் சிங் வைத்த பெயர் .
ரோகித்தின் ரசிகர்கள் அவரை ஹிட்மேன் என்று அழைப்பது வழக்கம்.
ரோகித்தின் மனைவி அவரை ரோ என்று அழைப்பாராம்.
இந்திய வீரர்கள் பலரும் இவரை இப்படித்தான் அழைக்கிறார்கள்.
ரஹானே
அஜ்ஜு, ஜின்க்ஸ் ரஹானேவின் முழு பெயர் அஜிங்கிய ரஹானே.
இதனை முன்னால் ஆஸ்திரேலியா ஷேன் வார்ன் கூப்பிடுவதற்கு சிரமப்பட்டார்.
அதனால் அஜ்ஜு என்றும் ஜின்க்ஸ் என்றும் கூப்பிட அதுவே நிலைத்து விட்டது.
ஷிகர் தவான்
கப்பர் ஷாேலே படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கப்பர்.
அதாவது ரஞ்சிப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்த காலத்தில் எதிரணிகள் சிறப்பாக விளையாடினால் துவண்டு கிடக்கும் தனது அணி வீரர்களுக்கு ஜோக் சொல்லி அவர்களை பூஸ்ட் செய்வாராம் தவான் .
கப்பர் பாத்திரமும் படத்தில் இதைத்தான் செய்யுமாம்.
அதனால் தான் இந்த பெயர் .
சுரேஷ் ரெய்னா
சோனு உண்மையில் இப்படி ஒரு பெயர் தனக்கு எப்படி வந்தது என ரெய்னாவுக்கே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் சோனு என்று கூப்பிட்டாராம் .
அன்று முதல் இன்று வரை சோனு என்றே ரெய்னா அழைக்கப்படுகிறார்.
ஹர்திக் பாண்டியா
ராக் ஸ்டார், ஹெய்ரி ஹர்திக் பாண்டியா அடிக்கடி மாற்றும் தனது ஹேர் ஸ்டைலுக்காகவே ஹெய்ரி என்று அழைக்கப்படுகிறார்.
அதே போல் எப்போதும் ஸ்டைலாகவும், எனர்ஜியாகவும் இருப்பதால் இவர் ராக் ஸ்டார் என்றும் சக வீரர்களால் அழைக்கப்படுகிறார்.