நகம் நகம் அறிய ஆவல்

நகம் நகம் அறிய ஆவல்
ஃபேஷன் உலகில் அன்றாடம் புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன.

 உடலையும், முகத்தையும் அழகு படுத்துவது என்பதை தாண்டி உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அழகுப்படுத்தும்.

 புது புது அழகு கலைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.

 அந்த வகையில் நெயில் எக்ஸ்டென்ஷன் எனப்படும் செயற்கை நகம் உருவாக்கமும், அழகு கலை பிரிவில் புதிதாக இணைந்திருக்கிறது.

 அது என்ன நெயில் எக்ஸ்டென்ஷன் பொதுவாக நகத்தை அழகு படுத்துவதும், அலங்கரிப்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

 ஆனால் நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது அழகான தோற்றத்திற்காக செயற்கை நகங்களை உருவாக்குவது பெண்களின் தேவைக்கு ஏற்றார் போல அளவுகளில் சேர்க்கை நகங்களை உருவாக்கி அதை அவர்களுக்கு பிடித்த முறையில் அழகு படுத்த முடியும்.

 நக பராமரிப்பில் அறிமுகமாகி இருக்கும் நவீன அழகியல் இது இப்போது நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றிய புரிதல் டீனேஜ் பெண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

 அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அழகு கலையை டீன் ஏஜ் பெண்கள் முயன்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.

 அந்த வகையில் நெயில் எக்ஸ்டென்ஷன் கல்லூரி மாணவிகள் தொடங்கி அலுவலகம் செல்லும் பெண்கள் வரை எல்லோரும் விரும்பக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

 நிறைய சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் நெயில் எக்ஸ்டென்ஷன் செய்திருக்கிறார்கள்.

 நெயில் எக்ஸ்டென்ஷன் கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இரண்டிலும் இதை செய்ய முடியும்.

 செயற்கையாக நகம் உருவாக்கி அதை புதுப்புது வழிகளில் அழகுபடுத்த முடியும் .

அதாவது இயல்பான நகப்பூச்சு அலங்காரமும் செய்யலாம்.

 அழகான டிசைன்களை கொண்டு வண்ணம் அல்லது ஓவியம் வரையவும் முடியும். இல்லை என்றால் போட்டோக்களை கூட செயற்கை நகங்களாக மாற்றி அழகாக முடியும்.

 செயற்கை நகம் என்பதால் உறுதித் தன்மை எப்படி இருக்கும்  என்ற கவலை தேவையில்லை.

 ஏனென்றால் நகத்தின் அடிப்பாகத்தில் இருந்தே செயற்கை நக உருவாக்க பணிகள் நடைபெறும்.

 அதனால் செயற்கை நகம் உறுதியாகவே இருக்கும்.

 மேலும் செயற்கை நகத்தையும் நகர் பகுதியையும் பசை கொண்டே ஒட்டுவதால் நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்கும்.

 அதனாலயே திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களில் இதை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

 மேலும் மணமகள் என்பதை தாண்டி மணமகள் தோழிகள், உறவினர்கள் என அனைவருமே இந்த அழகு கலையை விரும்புகிறார்கள்.
 நீங்களும் செய்து பாருங்கள்....

கருத்துரையிடுக

புதியது பழையவை