சொத்து பத்திரம் அர்த்தம் அறிவோம்

சொத்து பத்திரம் அர்த்தம் அறிவோம்
சொத்து பத்திரம் எதையாவது படிக்க நேர்ந்தால் பலரும் விழிப்பார்கள்.

 அது தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும் அதில் இருக்கும் பல சொற்களுக்கு அர்த்தமே தெரியாது.

 இதையெல்லாம் தமிழ் சொற்கள் தானா? இது அர்த்தம் என்ன? என்று தெரியாமல் தலையை தடவுவார்கள்.

 ஒரு சொத்து வாங்கும் போதும், விற்கும்போதும் அந்த பத்திரத்தில் உள்ள அனைத்து சொற்களுக்கும் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும். 

எனவே ஆவணங்களை படிக்கும் முன்பு இந்த சொற்களை உண்மையான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 பட்டா 

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ்.

 சிட்டா
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம் .

அடங்கல்
நிலத்தின் பரப்பு, பயன்பாடு கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம், கிராம நத்தம் ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

 கிராம தானம் 

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது தேவ தானம்.

 கோயில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

 இனாம்தார் 

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

 விஸ்தீரணம் 

நிலத்தின் பரப்பளவு க எல்லைகளை குறிப்பது.

 வில்லங்கச் சான்று 

ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர் அதனை மறைத்துவிட்டு அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும்.

 பதிவுத்துறை 

ஆவணம் புல எண், நில அளவை எண், இறங்குரிமை, வாரிசுரிமை, தாய் பத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம் இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும்.
 முந்தைய பரிவர்த்தன ஆவணங்கள் 

சுவாதீனம் ஒப்படைப்பு 

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம்

 நன்செய் நிலம்

அதிக பாசன வசதி கொண்ட நிலம், புன்செய் நிலம் பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

 சரத்து பிரிவு 
இலாக்கா துறை கிரயம் நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதலை குறிக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை