இந்தியாவின் நேரம் எங்கே?

இந்தியாவின் நேரம் எங்கே?

 இந்தியாவின் ஐ எஸ் டி எனப்படும் இந்தியன் ஸ்டேண்டர்ட் டைம் என்பது உத்திரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

 இன்னமும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், அந்த நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தின் நெல் வயலின் குறுக்கே அந்த 82.5  E தீர்க்க ரேகை கடந்து செல்வதை புவியியல் வல்லுனர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

 இதற்கு முன்பு இந்த தீர்க்க ரேகை கோடு வாரணாசியை கடந்து போகுவதாகவும், ஒரு சில வல்லுநர்கள் உஜய்னியை தொட்டு செல்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 தற்போது தான் அந்த ரேகை கடந்து செல்லும் இடம் மிர்சாபூர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த இடம் அலகாபாத்தில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும், கொல்கத்தாவில் இருந்து 650 km தூரத்திலும், வாரணாசியில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
 உலக நேரமான கிரீன்விச் நேரத்தை விட மிர்சாபூர் நேரம் ஐந்து மணி 30 நிமிடம் அதிகம் அதாவது கிரீன் வீச்சில் மதியானம் ஒரு மணி என்றால் இந்தியாவில் மாலை ஆறு முப்பது மணி. மிர்சாபூர் நேரத்தை விட சென்னையின் நேரம் ஐந்து நிமிடம் அதிகம். கொல்கத்தா 23 நிமிடம் குறைவு மும்பை 38 நிமிடம் அதிகம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை