மூளையின் செயல்பாடு

மூளையின் செயல்பாடு

 தலைவலி, மூளையுடன் சம்மந்த பெற்றிருப்பதினால் மூளை அமைப்பை பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது.

 மூளையும், தண்டுவடமும் சேர்ந்துதான் நரம்பு மண்டலம்.

 இவை மூன்றடுக்கு உரையினால் பொருத்தப்பட்டிருக்கும்.

 இந்த உரைக்கு மெனிஞ்சஸ் என்று பெயர்.

 மூளை, கபாலத்தின் உள்ளே மிகவும் பத்திரமாக மிதந்து கொண்டிருக்கிறது.

 கபாலத்துடன் உறைந்து விடாமல் இருக்க முளையை தண்டுவட திரவம்  பாதுகாக்கிறது.

 உடலின் வலது பகுதியை இடப்பக்க மூளையும், இடது பகுதியை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.

 வலது பக்க மூளையின் செயல்கள்:

 செய்கை மொழி, தகவல் பரிமாற்றம், உடல் அசைவுகள் மூலம் தகவல் பரிமாற்றம், தொடுதல் மற்றும் பகுத்தறிவு சிறு தகவல்களை ஒருங்கிணைத்து முழுமையான தகவல்களை பெறுதல், உணர்வுகள் மற்றும் கற்பனைகளைப் புரிந்து கொண்டு செயல்படுதல், கலை உணர்வு மற்றும் படிப்பு ஆற்றல்களை வெளிப்படுத்துதல், கற்பனை நுண்ணறிவு, கலை ஆர்வம், இசையில் நாட்டம், முப்பரிமாண உணர்வு போன்ற திறமைகள் வளர்ச்சி அடைவதுடன் உடலின் இடது பக்க இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

 இடது பக்கம் மூளையின் செயல்கள்:

 சொற்கள், பகிரங்க கருத்துக்கள், செய்திகளை ஆராய்ந்து பகுத்து ஒழுங்குபடுத்துதல், முடிவுகளை எடுப்பதற்கு ஆய்ந்து செயல்படுதல், சிந்தனை ஆற்றல், ஊக்கம், அறிவியல் மற்றும் கடிதம் ஆகியவற்றில் ஆர்வம், இசையில் நாட்டம், முப்பரிமாண உணர்வு போன்ற திறமைகள் வளர்ச்சி அடைவதுடன், உடலின் வலது பக்க இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

 சாதாரணமாக எல்லோருக்கும் மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

 அதனால் தான் வலது பக்க உறுப்புகளை அதிகம் உபயோகப்படுத்துகிறோம்.

 சிலருக்கு இடது கை பழக்கம் உண்டு அவர்களுக்கு மூளையின் வலது அறைக்கோலத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது இதற்கு காரணம்.

 மூளையில் வலி உணர்வுகள் இல்லாததால் மூளை வலியை உணராது .

தலைப்பகுதியில் அமர்ந்த சில நரம்பு தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக்கூடியவை.

 மூளை உரை குருதி கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை.

 தலைவலிகள் பெரும்பாலும் மூளையுரையில் அல்லது குருதி கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன .
தலையில் காணப்படும் தசை நாறுகளும் வலியை உணரக்கூடியவை.

கருத்துரையிடுக

புதியது பழையவை