வெங்காயத்தின் பயன்கள்

வெங்காயத்தின் பயன்கள் 
வதக்கிய வெங்காயத்தை விட பச்சை வெங்காயத்திற்கு மருத்துவ சக்தி அதிகம்.

 வெங்காயம் ஒரு கிருமி நாசினியாகும்.

 தினம்தோறும் தோல் உரித்த வெங்காயத்தை சாப்பிட்டால் காச நோய் குணமாகும் .

பச்சை வெங்காயத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும்.

 மேலும் இதனுடன் மோர் குடித்து வந்தால் வயிற்று கடுப்பு நீங்கும்.

 தோல் உரித்த வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து உண்ண பித்தம் போகும்.

 முகப்பரு நீங்குவதற்கு பருஉள்ள இடத்தில் வெங்காய சாறு தடவலாம்.

 வெங்காயத்துடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதப்பினைகளும், நெருப்பணலில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு முதலியன நீங்கும்.

 உணவில் அதிக அளவு வெங்காயம் சேர்த்துக்கொள்ள சர்வ நோய்கள் வராது.

 தினமும் பச்சை வெங்காயத்தை உண்டு வந்தால் வாய், தொண்டை முதலியவற்றில் காணப்படும் கிருமிகளின் தொல்லைகள் நீங்கும்.

 கொப்பளம், காயம் முதலியவற்றுக்கு வதக்கிய வெங்காயத்தை அரைத்து பூச வேண்டும்.

 வதக்கிய வெங்காயத்துடன் சீரகம், பசுவின் நெய், கற்கண்டு கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
 வெங்காயச் சாறுடன் கடுகு எண்ணெயை கலந்து பயன்படுத்தினால் மூட்டு வலி நீங்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை