மிளகின் மகத்துவம்
கொட்டும் மழை ஒரு பக்கம், குளிர்காலம் மறுபக்கம் என நாமே ஒதுங்கினாலும் கூட நோய்கள் பல வந்து சேரும் காலகட்டம் .
குறிப்பாக காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி என இவற்றுக்கு எந்த வீடுகளிலும் பஞ்சம் இருக்காது.
அதற்காகவே நன்மை செய்யும் நண்பனாக நம் வீட்டு அஞ்சரை பெட்டிகளில் நிறைந்திருக்கிறது மிளகு.
கொதிக்க வைத்த நீர்க்கரைசல், ஜலதோஷம் இவற்றுக்கு அருமருந்து மிளகு ரசம் .
தினம்தோறும் எடுத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
மிளகு கொடியின் இலையை நொச்சி இலையுடன் நீர் விட்டு கொதிக்க வைத்து வலி அடிப்பட்ட வீக்கம் இவற்றின் மேல் வைத்து ஒத்தடம் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.
மிளகு இலை இரண்டு, லவங்கம் ஒன்று, வெற்றிலை ஒன்னு இவற்றை மைய அரைத்து சுண்டைக்காய் அளவிற்கு காலை மாலை எடுத்துக் கொள்ள காய்ச்சல் குணமாகும்.
தினமும் 5 மிளகுடன் இரண்டு வெற்றுலை மென்று தின்றால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
பாலுடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க சளி நீங்கும்.
மிளகுடன் சிறிய வெங்காயம், கல் உப்பு சேர்த்து அரைத்து புழுவெட்டு இடத்தில் தடவி குளித்து வந்தால் புழுவெட்டுகள் குணமாகி முடி மீண்டும் வளரும்.