முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு உண்டு
முதுகு வலியானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு வழக்கமான பிரச்சனையாக மாறிவிட்டது.
நம்முடைய தினசரி உணவு, பருப்பு வகைகள் கூட முதுகு வலி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
தீர்வு
முதுகு வலியை உடற்பயிற்சியாலும் சரி செய்யலாம்.
கை, கால்களை மெதுவாக நீட்டி மடக்குதல் நடைபயிற்சி செய்வதன் மூலம் தசைகள் வலுவாகி இறுக்கமாவது தடுக்கப்படுகிறது.
சரியான, ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் முக்கியம்.
பணி, வாழ்க்கை முறையால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும், நிற்பதாலும் கீழ் மூட்டு வலி ஏற்படும் .
தசைகளை வலுவாக வைத்துக்கொள்ள எடை தூக்குதல், உட்காருதல், உடலை நகர்த்துதல் போன்ற செயல்களின் போது சரியான உடல் இயக்கவியலை பின்பற்றவும், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
கடினமான முடிச்சு ஏற்பட்ட முதுகு தசைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர மசாஜ் செய்யவும் .
கீழ் முதுகு வலியால் அவதிப்படும்போது மல்லாந்து படுப்பதில் ஒருவித அசெளகரிகம் ஏற்படுவதால் முழங்காலை சற்றும் மடக்கி ஒரு பக்கமாக சரிந்து படுக்கவும்.
இரு கால்களுக்கு இடையே தலையணை வைக்கவும்.
மல்லாந்து படுப்பதினால் தொடைகளின் கீழ் தலையணை அல்லது சுருட்டப்பட்ட துண்டினை வைப்பதன் மூலம் கீழ் முதுகினை மீது ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
நிலையான, உறுதியான மேற்பரப்பின் மீது படுக்கவும்.
இது தவிர குதிகால் உயரமான சிறப்புகள் சூ அணிவது நிகோடியன் உபயோகம் போன்றவை முதுகெலும்பு வட்டுக்களில் சிதைவை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை குறைப்பதால் அவற்றை தவிர்க்கவும் .
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் முதுகுக்கு தாங்களாகவே இயங்கும் நாற்காலியை பயன்படுத்தவும்.
கணினியின் திரை கிட்டத்தட்ட கை எட்டும் தூரத்தில் இருக்கும் மாறும் கணினி திரைகள் கண்களின் மட்டத்திற்கு சற்று குறைவான உயரத்தில் இருக்கும் மாறும் வைக்கவும்.
போதுமான கால்சியம், பாஸ்பரஸ் சத்துள்ள உணவை சரியான அளவில் உண்ணவும்.
மீன், இறைச்சி, பால் பொருட்கள் கோதுமை, பார்லி, சோளம் போன்ற தானியங்கள் ஓட்ஸ், கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம்.