சிறுநீரக கல் கரைய

சிறுநீரக கல் கரைய
சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட் யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று திரண்டு பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாவது தான் சிறுநீரக கல் என சொல்லப்படுகிறது.

 இந்த கற்கள் சிறுநீர் பாதி வழியாக வரும்போது அடைப்பை ஏற்படுத்தி தீவிரமான வலியை உண்டாக்குகிறது.

 அறிகுறிகள் 

முதுகில் வலி ஆரம்பித்து அதன் முன் பக்கம் வயிற்றுப் பகுதிக்கு தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள் அந்தரங்க உறுப்புகளுக்கு பரவினாலோ, காய்ச்சல் சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலும் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்.

 இந்தக் கல் 5 மில்லி மீட்டரை விட சிறியது எனில் சிறுநீரிலேயே வெளியேறிவிடும்.

 8 மில்லி மீட்டர் என்றால் எண்பது சதவீத வாய்ப்பு உண்டு.

 ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு வளர்ந்து விட்டால் சிரமம் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம் சிறுநீரை பெருக்கி இயலாது செயலிழந்து விடும் 

வீட்டு வைத்தியம் 

தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 கோடைகாலத்தில் தினமும் ஒரு இளநீரும் மற்ற காலங்களில் வாரத்திற்கு இரண்டு முறையாவது இளநீர் குடிப்பது நலம் .

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.

 வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம் .

அகத்திக் கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து அந்த நீரை அருந்தலாம் .

வாழைத்தண்டு அல்லது முள்ளங்கி சாறு 30 மில்லி அல்லது தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.

சாப்பிடக்கூடாதவை 

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம் வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புகண்டம், முந்திரி பருப்பு,
 பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி அல்லது டீ, சமையல் சோடா, சோடியம் பை கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், கொக்கோ, சாக்லேட் குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை