சுவை உப்புகள் உஷார்

சுவை உப்புகள் உஷார்
உலக அளவில் உணவின் கூடுதல் சுவைக்காக மோனோ சோடியம், குளூட்டோமோட் சேர்க்கப்படுகிறது.

 இதனை அஜினல் உப்பு என்று சொல்வார்கள்.

 இந்தியாவை பொறுத்தவரை அஜினமோட்டோ குறித்து பல்வேறு ஐயங்கள் உள்ளன.

 இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது என பேசப்பட்டு வந்தாலும் ஒருபுறம் இந்திய உணவுகள் பலவற்றில் என்றும் மோனோ சோடியம், குளூட்டேமேட் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.

 பொதுவாக சீனர்கள் தான் அவர்களது உணவுகளின் சுவைக்காக அதிகளவில் இதனை பயன்படுத்தி வந்தனர்.

 பின்னர் சீனாவின் பாரம்பரிய உணவுகளான நூடுல்ஸ், சூப், ப்ரைட் ரைஸ் போன்ற உணவுகள் மூலம் ஆசியா கண்டம் முழுவதும் இது பரவியது.

 தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் போது இது சோடியம் மற்றும் கூட்டமிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் கலவையாகும்.

 மேலும் இவை தாவர உணவுகளான சர்க்கரைவள்ளி கிழங்கு, கரும்புச் சோளம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

 இதனை பொருத்தவரை குறைந்த அளவில் பயன்படுத்தும் போது பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

 ஆனால் அதிகப்படியான பயன்பாடு ஆனது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம் .

உண்மையில் இதில் உள்ள குளுட்டமிக் அமிலமானது மூளையில் நரம்பு கடத்தியாக செயல்படுகிறது .

இதனால் தீங்கு விளைவிக்க கூடியது என்ன பலர் நம்புகின்றனர்.

 ஏனெனில் குளுட்டமிக் நரம்பு செல்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் .

ஆனால் இதை நிரூபிக்க எந்த ஆய்வுகளும் இல்லை.

 இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 இது உடலில் நீர் இழப்பு சோர்விற்கு வழி வகுக்குகிறது.

 மேலும் இது சிலருக்கு வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.

 இது குடலில் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

 இதனால் ஒட்டுமொத்த செரிமான அமைப்பிலும் பிரச்சனை ஏற்படுகிறது.

 அது போன்று  அதிகப்படியாக இதனை உண்பது ரத்த அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 மேலும் ஒற்றைத் தலைவலி அல்லது கடுமையான தலைவலி ஏற்படுகிறது.

 இதில் உள்ள மோனோ சோடியம் குளுட்டமேட்டானது தூங்கும்போது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

 இதனால் அஜினமோட்டோ அதிகம் உண்பவர்கள் குறட்டை பிரச்சனைகளுக்கு ஆளாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
 அதிர்ச்சி ஊட்டம் விதமாக ஓர் ஆய்வில் இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது புற்றுநோய் செல்களை இனப்பெருக்கம் அடைய செய்வதோடு பெருங்குடல் புற்றுநோய்க்கும் வழி வகுக்குறது என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை