ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
காலை எழுந்ததும் காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவர்கள் பலரும் தற்போது காபி, டீக்கு மாற்றாக மூலிகை டீ பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
மூலிகை டீ பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்:
மூலிகை டீ
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.
இது செரிமானம் பாேன்ற குறிப்பிட்ட நன்மைகளை வழங்குகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த உடலை ஆரோக்கியம் ஆக்குவதும், மனதை அமைதி படுத்தவும், புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.
மூலிகை டீ பொறுத்தவரை கோடை காலத்தை விட குளிர்காலத்தில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
குறிப்பாக சளி இருமலை எதிர்த்து இந்த மூலிகை டீ போராடும் என்றும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலிகைக்கு உடலுக்கு நன்மை செய்தாலும் டீ தயாரிப்பு முறையில் செய்யும் ஒரு சில தவறுகளால் உடல் நல பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
அவை என்னவென்று பார்ப்போம்:
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மூலிகை டீ பருகும் போது இதில் சர்க்கரை சேர்த்து பருகுவதை தவிர்த்து விட்டு தேன் சேர்த்து பருகலாம்.
உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பயனை கொடுக்கும்.
அதே சமயம் சூடாக இருக்கும் மூலிகை சட்டியில் ஒருபோதும் தேன் கலந்து விடக் கூடாது.
டீ மிதமான சூட்டிற்கு வந்த பிறகே தேன் கலக்க வேண்டும்.
மூலிகை டீ அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகக்கூடாது.
மிதமான சூட்டில் பருகுவது சிறந்தது.
மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடு படுத்தி பருக கூடாது.
அப்படி பருகினால் மூலிகைகள் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
பித்தம் சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது.
ஜீரணமாகாத உணவு சாப்பிடும் போது மூலிகை டீ குடிப்பது நல்லது என்றும் இஞ்சி டீ, புதினா, சோம்பு ஆகியவற்றை சேர்த்து பருகினால் உடல் பாதிப்புகளை தடுக்க உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே சாதாரண டீ, காபி குடிப்பதை விட மூலிகை டீ குடித்தால் உடலுக்கு நன்மை.