தேங்காய் தண்ணீரின் அற்புதங்கள்
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும் .ஆனால் தேங்காய் தண்ணீர் அடங்கியிருக்கும் நன்மைகள் என்ன பலருக்கும் தெரியாது. அவை என்னவென்று பார்ப்போம்:
தேங்காய் தண்ணீர் உடலை சுத்தப்படுத்தும்.
பானங்களில் சிறந்தது தேங்காய் தண்ணீர். தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழும் அவை என்னவென்று பார்ப்போம் :
தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.
காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
தைராய்டு , ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழி வகுக்கும்.
தேங்காய் தண்ணீர் சிறுநீர்ப்பாதை தொற்றுகளை குணமாக்கும்.
சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்தும்.
மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு சிறுநீரக கற்கள் இருந்தால் அவற்றை கரைத்து விடும் ஆற்றல் கொண்டது.
தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக உள்ளதால் தொடர்ந்து குடித்து வர செரிமான பிரச்சனைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.
மேலும் வாயு தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.
தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வர உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடை குறையும்.
உயர் ரத்தம் அழுத்தம் உள்ளபவர்கள் தினமும் காலையில் ஒரு தேங்காய் தண்ணீர் அருந்தி வர உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவரும் .
இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு மறுநாள் காலையில் எழும்போது கடுமையான தலைவலியை உணரும் போது தேங்காய் தண்ணீர் குடித்தால் தலைவலி நீங்குவதோடு ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவதும் தடுக்கப்படும்.
சிறிதளவு தேங்காய் தண்ணீர் தினமும் அருந்தி வந்தால் உடல் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு நீர்ச்சத்து அதிகமாகும்.
மேலும் நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடன் போதிய ஆற்றலுடன் செயல்பட முடியும்.