பாட்டி வைத்தியமும் பயன் தரும் யோசனைகளும்
இனிப்பு பலகாரம் என வயிறு முட்ட அளவிற்கு சாப்பிட்டு விட்டீர்களா? கவலை வேண்டாம். வெங்காயத்தை துண்டாக்கி பச்சையாக சாப்பிடுங்கள் ஜீரணமாகிவிடும்.
கடும் தீயில் அறை எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
வெற்றிலையில் சிறிது உப்பு வைத்து சாப்பிட்டால் வயிற்று வலி பறந்து போகும்.
கசகசாவை நன்கு அரைத்து பாலில் கலந்து அருந்தினால் வயிற்று கடுப்பு நீங்கும் .
வாய்ப்புண், குடல்புண் ஆறும் .
சீதபேதி உள்ளவர்கள் இளம் நொங்கை மேல் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர நலமாகும்.
வெந்தயத்தை மோரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயு தொல்லை, வயிற்று தொல்லை நீங்கும்.
அகத்திக்கீரை பித்தம் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் உடனே நிற்கும்.
வாய் புண்ணுக்கும் இது நல்லது.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
எறும்பு கடித்து விட்டதா? கவலை வேண்டாம்! கடித்த இடத்தில் உப்பு கலந்த நீரை ஊற்றுங்கள் எறும்பு கடித்த வலி உடனே மறையும்.
புதினா கீரையை வெயிலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் வராது.
மழைக்காலங்களில் உப்பு ஜாடிகளில் ஈரம் கசியும் .இதை தவிர்க்க இரண்டு பச்சை மிளகாய்களை அதில் போட்டு விட்டால் ஈரம் கசியாது .
மாவில் பூச்சிகளோ வண்டுகளோ வராமல் இருக்க ஒரு ஸ்பூன் உப்பை சிறிய துணியில் முடித்து மாவில் போட்டு வைக்கவும்.
படை நீங்க எலுமிச்சை சாறுடன் துளசி இலைச்சாறு கலந்து படை மீது தடவினால் மறைந்து போகும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் நன்கு பழுத்த வாழைப்பழத்தையும் சேர்த்து பிசியுங்கள் .சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும், கருவேப்பிலையும் போட்டு மூடி வைக்க வேண்டும் .
சாம்பார் மிக வாசனை உடன் இருக்கும்.
தயிரை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கெடாமல் வைத்திருக்க தயிரினுல் தேங்காயை பல்லு பல்லாய் சீவி போடுங்கள் தயிர் புளிக்கவும் செய்யாது ஒரு வித வாடையும் அடிக்காது.