கருவேப்பிலையின் நன்மைகள்
கருவேப்பிலியில் கால்சியம், கார்போஹைட்ரேட், பைபர், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது.
மேலும் கருவேப்பிலையில் இரும்பு சத்தும், போலிக் அமிலமும் அதிக அளவு இருப்பதால் உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது.
தலை முடி மற்றும் தோல் ஆகியவற்றை பொலிவுடன் இருக்க உதவுகிறது.
நீரழிவுக்கு உதவும் கருவேப்பிலை.
தினசரி உணவில் கருவேப்பிலை சேர்ப்பதன் மூலம் அது நமக்கு உடலுக்குத் தேவையான இன்சுலின் உற்பத்தி செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் செரிமான அமைப்புகள் சிறப்பாக செயல்பட கருவேப்பிலை உதவுகிறது. எனவே வயிறு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தவும் கருவேப்பிலை பயன்படுகிறது.
குறிப்பாக கருவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமான நொதிகளை தூண்டி குடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது.
இதில் உள்ள கார்போசோல் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்த கருவேப்பிலை ஃப்ரிரேடிக்கல்ஸ்களால் கொலஸ்ட்ரால் ஆக்சிடேசனை தடுப்பது மூலம் கெட்ட கொழுப்பு எனப்படும் எல் டி எல் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்கிறது.
இதனால் ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க கருவேப்பிலை உதவுகிறது.
எடையை குறைக்க உதவும் .
தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உடலில் இருந்து சுத்தப்படுத்துவதோடு கலோரிகளை எரித்து கொழுப்பு சேருவதையும் தடுத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது.
இளநரையை தடுக்கிறது.
கருவேப்பிலை இளநரையை தடுக்க மற்றும் முடி நரைப்பதை தாமதப்படுத்தவும் உதவுவதோடு மட்டுமல்லாமல் பொடுகு பிரச்சனை மற்றும் முடி சேதத்தையும் சரி செய்கிறது.
மயிர் கால்களை வலுவாக்கி முடி உதிர்வை கணிசமாக குறைக்கிறது.