பாதத்தை பாதுகாப்போம்
பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் கால்களில் பாத எரிச்சல் வரும் .
மேலும் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமானாலும் பாத எரிச்சல் ஏற்படும்.
அதனால் பாத எரிச்சல் என்று உடன் சர்க்கரை நோய் என எண்ண வேண்டாம்.
ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு புற்று நோய்க்கான ஹீமோதெரபி எடுப்பதால் முடக்கு வாதம் போன்ற பல காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் வரலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல் உண்டாகும் .
சில சமயம் காலில் நெருப்பை வைத்தது போல் இருக்கும் .மேலும் கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறி .
பின் அந்தப் பகுதிகளில் உணர்ச்சி குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவை பாத எரிச்சலாக மாறும்.
வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கும் பி 12 குறைபாடு மற்றும் ஃபோலைட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்சனை அதிகம் வருகிறது .
ஆர்தரைட்டிஸ் பிரச்சனைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகுவதாலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் ,கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாதை எரிச்சல் உண்டாகலாம் .
அது போன்று ஹைபோ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம்.
தைராய்டு அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் இதை தவிர்க்கலாம் .
தீர்வுகள்
மருந்தாணியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாதி எரிச்சல் குறையும்.
மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவும் .
இரண்டு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூளை எடுத்து நீர் சேர்த்து குலைத்து எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உறங்கும் முன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும்.
பின் சுத்தமான தேங்காய் எண்ணெயை காலில் தடவினால் எரிச்சல் போகும் .
நரம்பு சார்ந்த பிரச்சினைகளாலும் பாத எரிச்சல் ஏற்படும். எனவே தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.