சமையலறைனா இப்படிதாங்க இருக்கணும்
சமையலறையை வடிவமைக்கும் போது அத்தியாவசிய பொருட்கள் வைக்கும் இடத்தினை திட்டமிட்டு அமைக்க வேண்டும்.
சமையலறையை சரியான வசதிகள் அமைக்க சில ஆலோசனைகள்.
சமையல் மேடையின் அளவு
சமையல் மேடையின் மீது பொருத்தும் அடுப்பை நின்று கொண்டு சமைக்கும் போது முதுகு வலி வராதவாறு சரியான உயரத்தில் பொருத்துவது அவசியம்.
சமையல் மேடையின் சராசரி உயரம் 34 அங்குலம் .
இந்த அளவில் சமையல் மேடையை அமைத்தால் கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்கலாம்.
சமையல் மேடைக்கும் அதற்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் இழுவை அலமாரிகளுக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும்.
சமையல் மேல் அலமாரிகள்
சமையலறை மேடைக்கும். அதற்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் அலமாரிகளின் உயரம் 24 முதல் 27 அங்குல உயரத்தில் அமைக்கப்பட வேண்டும் .
அலமாரிகளின் உள்பகுதி
சமையலறை மேல் அலமாரிகளின் உள்பகுதி 12 முதல் 15 அங்கலத்துக்குள் இருக்க வேண்டும் .
இந்த அலமாரிகளை குறைவான உள்பகுதியுடன் அமைப்பது நின்று சமைக்கும்போது தலையில் இடித்துக் கொள்ளாமல் இருக்க உதவும்.
சமையலறையின் மேல் கீழ் அலமாரிகளின் அகலம் சரிசமமாக இருப்பது அவசியம்.
அடுப்பும் புகைக்கூண்டும்
அடுப்புக்கும் ,புகை கூண்டுக்கும் இடையே இருக்கும் உயரம் 26 முதல் 36 அங்குலமாக இருக்க வேண்டும்.
ஒரு வேளை அடுப்புக்கும் , புகை கூண்டுக்கும் இடையே இருக்கும் உயரம் 30அங்குலத்துக்கு மேலே இருந்தால் அது புகை குண்டின் போக்கை பாதிக்கும்.
குளிர்சாதன பெட்டி
குளிர்சாதன பெட்டிக்கும் , சுவருக்கும் இடையே இரண்டு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும்.
மைக்ரோவேவ்
சமையலறை மேடையில் இருந்து 13 முதல் 18 அங்குள்ள உயரத்தில் மைக்ரோவேவ் கருவியை பொருத்த வேண்டும்.
இரண்டு மேடைகள்
சமையலறையில் இரு புறங்களிலும் மேடைகள் அமைப்பதாக இருந்தால் இரண்டு மேடைகளுக்கும் இடையில் நான்கு அடி இடைவெளி இருக்க வேண்டும் .
நான்கு அடிக்கும் குறைவான இடைவெளி இருந்தால் சமையலறையில் இரண்டு பேரால் ஒரே நேரத்தில் இணைந்து நின்று சமைக்க முடியாது.