குழந்தைகளை விளையாட விடுங்கள்
இன்றைய சூழலில் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு அச்சமாக இருக்கிறது .
ஆனால் வெயிலில் கொஞ்ச நேரம் ஆவது வியர்வை சிந்தி விளையாடினால் தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியம்.
கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் தான் இப்போது பல குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
இதனால் சுறுசுறுப்பு இல்லாமல் போவது, சிந்திக்கும் திறனை இழப்பது, வித்தியாசமாக எதையும் செய்யும் குணத்தை இழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சக நண்பர்களுடன் பழகுவது, பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என எதுவும் தெரியாமல் போகும்.
குழந்தைகளை விளையாடச் சொல்லி பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ் விளையாட்டுகள் என்ன என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
ஓடியாடி விளையாடுவதால் தசைகள் மற்றும் மூட்டுகள் உறுதியாகும்.
எலும்பு மற்றும் நரம்பு வளர்ச்சி சீராக இருக்கும்.
துடிப்பாக விளையாடும் குழந்தைகளுக்கு நன்கு பசிக்கும்.
பெற்றோர் வற்புறுத்தாமலேயே தானாகவே நன்கு சாப்பிடுவார்கள்.
விளையாடும்போது அதிக அளவில் ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும் .
மூளைக்கும் ஆக்சிஜன் நிறைய செல்வதால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
இதனால் படிப்பில் கவனம் அதிகமாகும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இலக்குகளை அடையவும், விளையாட்டு உதவுகிறது.
மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
எப்படி ஒரு பிரச்சினையை கையாளுவது என்ன சிந்திதால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளிவரலாம் என்றெல்லாம் கற்றுக் கொள்ள முடியும்.
முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
அதன் பலன் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் .
விளையாடுவதன் மூலம் வெற்றிகளை அடக்கத்துடன் கொண்டாடும் இயல்பு வரும் .
தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரும்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு எல்லாம் வளரும்.
சேர்ந்து விளையாடுவதால் நட்புணர்வு வளரும்.
குழுவாக இணைந்து செயல்படும் திறன் வளரும்.
விளையாட்டில் நியாயமாக செயல்பட கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் வாழ்க்கையிலும் நேர்மையாக இருப்பதற்கு இது உதவும்.
விளையாட்டு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
குண்டாவது தடுக்கிறது.
உடலை கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் ,வசீகரமாகவும் ஆக்குகிறது .
உடல் சக்தியை அதிகரிக்கிறது.
பதற்றம், மன அழுத்தம், மனசோர்வு எல்லாம் குறைகிறது.
எந்த சூழலுக்கும் ஏற்றபடி தங்களை தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.
கவனத்தை கூர்மையாக்கி எதையும் சிறப்பாக செய்ய உதவுகிறது.
அறிவாற்றலை அதிகரிக்கிறது.
மனதில் தன் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
ஆளுமையை வளர்கிறது.
தங்களைப் பற்றி குழந்தைகள் பெருமிதமாக நினைப்பார்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் .
வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
தசைகளை இயல்பாக்கி உடல் உறுப்புகளின் விரிவுத்திறனை வளர்க்கிறது .
பெரியோர்களின் உதவியோ? கட்டளையோ? இல்லாமல் அன்னிச்சையாக செயல்களை செய்யும் திறனையும் இனிமையாக கொடுக்கிறது.
உடல் சோர்வை குறைக்கிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
சுவாசமும் சீராகிறது.
ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .
உடல் சேர்ந்து இருக்கும் கழிவுகள் வியர்வையாக வெளியேறும்.
அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி உடல் குளிர்ச்சி அடைகிறது.