கடுகு சமாச்சாரம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் மத்தியில் கடுகின் பயன்பாடு இருந்துள்ளது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது உண்மை.
நிறைய மருத்துவ குணங்களைக் கொண்ட கடுகுக்கு தான் திரிகடுகம் எனும் மூன்று மருத்துவப் பொருட்களில் முதலிடம்.
கடுகுக்கு தனி சுவை என்று இல்லை.
நீருடன் சேரும்போது அதன் மேல் தோல் நீக்கி மைரோஸினேஸ் எனப்படும் நாெதியம் வெளிப்படுகிறது.
இதுவே கடுகு தனிப்பட்ட சுவைக்கு காரணம்.
இட்சுவைக்காகத்தான் தாளிக்கவும், வாசனைக்காகவும் சமையலில் கடுகு பயன்படுத்தப்படுகிறது.
கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய் கடுகு, மலை கடுகு , சிறுகடுகு என வகைகள் உண்டு.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் கடுகு பதிவு செய்யப்படுகிறது.
கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்து பூசப்படுகிறது.
உடலுக்கு தேவையான எண்ணெய் சத்து உள்ள கடுகில் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோ செனோக் ,ஆலிக், பால்மிடிக் போன்ற அமிலங்கள் உள்ளன .
எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து கொண்ட கடுகு கெட்ட கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.
உடல் பருமனை குறைக்கும்.
இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்கும்.
போலேட்ஸ், நியாசின், தயாமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம் போன்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் கடுகில் உள்ளன ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
கால்சியம் , மாங்கனீசு, தாமிரம், இரும்பு துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளன.
கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம் ரத்த சிவப்பு அணுக்கள் உறுதிக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கு எடுக்கின்றன .
இருமலை கட்டுப்படுத்தக்கூடியது.
விஷத்தை முறிக்க வல்லது.
ஜீரண கோளாறுகளை சரி செய்யக்கூடியது.
ஒற்றைத் தலைவலியை போக்கும் தன்மை கொண்டது.
விக்கலை கட்டுப்படுத்தக்கூடியது.
ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது.
கடுகு இதனால் சமையலில் மிக முக்கிய அங்க வகிக்கிறது.
கடுகு பசியை தூண்டக்கூடியது.
சிறிது தேனுடன் வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடு படுத்தினால் இளகிய பதத்தில் வரும் ஆறிய உடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும்.
ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
கடுகு ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மாதவிலக்கு பிரச்சினையையும் கடுக தீர்க்கும் .
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.