கை மருத்துவ குறிப்புகள்

கை மருத்துவ குறிப்புகள் 
தலையில் நீர் கோத்திருந்தால் நெற்றியில் சுண்ணாம்பு தடவலாம் .
நீர் வடிந்துவிடும்.

 தொண்டையில் தடவிட கபம், இருமல் மட்டுப்படும் .

புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டாமல் சூடு படுத்தி தடவிட சுளுக்கு உடனே மறைந்து விடும்.

 வெங்காயத்தை அடிக்கடி பயன்படுத்த வயிற்றுப்புண் குணமாகும்.

 கர்ப்பிணி பெண்கள் சிறிது ஓமத்தை வாயில் அடக்கிக் கொள்ளலாம் வாந்தி, வயிற்றுப் பிரட்டல் நீங்கும்.

 எலுமிச்சைப்பழத்தில் இஞ்சி சாறு கலந்து குடிக்க செரிமான சக்தி அதிகரிக்கும்.

 மருந்தாணி இலையுடன் சிறிது மஞ்சள், வேப்ப இலை சேர்த்து அரைத்து சேற்றுப்புண் மீது தடவ நல்ல குணம் கிடைக்கும்.

 தக்காளி சூப் அடிக்கடி வைத்து குடிக்க பற்களும், ஈறுகளும் பலப்படும்.

 தயிரை அரிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ அரிப்பு நீங்கும் .
தும்பை பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு பின் ஊறியதும் தலைக்கு தடவ பொடுகு நீங்குவதுடன் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை