இதயத்தை பாதுகாக்கும் ஐந்து வகை உணவுகள்

இதயத்தை பாதுகாக்கும் ஐந்து வகை உணவுகள்

ஒன்று:
பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜுமா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை .

இதயத்தை பாதுகாக்கும் ரத்த கொதிப்பு, ரத்த கொழுப்பு கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை.

 இரண்டு:
 ஓட்ஸ், திணை, பார்லி போன்றவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .

இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்கக்கூடிய திறன் கொண்டது.

 மூன்று:
 பூண்டில் அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது.

 இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

 மேலும் உடலில் காணப்படும் கொழுப்பு புரதத்தை குறைத்து இதயத்தை காக்கக்கூடியது.

 நான்கு:

சிவப்பு ராஸ்பெரிஸ், ஜெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெரீஸ் எனப்படும் பழ வகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை.

 அவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக் கூடியவை என்கிறது ஆய்வுகள் .

எனவே இந்த ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழங்களை டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் நமது இதயத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஐந்து:

பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும் .

நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால் இதயத்திற்கு நலம்.

 நார்ச்சத்து மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப் பொருட்கள்.
 இவை சரியான சரிவிகித உணவு முறையுடன் இந்த உணவுகளையும் எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை