சர்ம பாெலிவை பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் மசாஜ்

சர்ம பாெலிவை பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் மசாஜ்
சருமத்தின் பாெலிவை பாதுகாப்பதற்கு உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் பசை முக்கிய பங்காற்றுகிறது.

 இதன் ரசாயத்தன்மையோடு பொருந்தக்கூடிய ஆலிவ் எண்ணெய் அது தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

 சரும பிரச்சனைகள் நீங்கும்.

 தேவையானவை 

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி,
 மென்மையான பருத்தி துணி,
 வெந்நீர்.

 செய்முறை 

உங்கள் விரல் நுனியை பயன்படுத்தி வட்ட இயக்கத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்யவும்.

 மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தி தேய்க்கவும் .

இப்போது பருத்தி துணியை வெந்நீரில் நினைக்கவும்.

 அரை வெப்ப நிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்தி பிடிக்கவும்.

 துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நினைக்கவும்.

 இந்த முறை துணியை வைத்து அழுத்துவதற்கு பதிலாக எண்ணையை அகற்றுவது போல் அழுத்தி மசாஜ் செய்யவும்.

 அதன் பிறகு டிஷ்யூ பேப்பரால் முகத்தை துடைத்து உலர வைக்கவும்.

 இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்தால் ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும் .

சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 எண்ணெய் பசை கொண்டு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை