அழகு தரும் அவகேடா
பச்சை பசேல் நேரத்தில் காயை போல் காட்சி அளிக்கும் அவகேடாவும் ஒரு வகை கனி தான்.
தற்போது பல்வேறு இடங்களில் விற்பனையாகி வரும் அவகேடாவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது பாப்போம் .
அவகேடாவில் 75% நல்ல கொழுப்பு உள்ளது.
60% பொட்டாசியம் இருப்பதால் வாழைப்பழம் மற்றும் பதப்படுத்தப்பட்ட படங்களை விட கூடுதலாக நல்ல கொழுப்பு உள்ளது.
அதிகமான நார்ச்சத்தும் உள்ளது.
இதில் 75 சதவீதம் கரையாத நார்ச்சத்தும் மற்றும் 25 சதவீதம் கரையக்கூடிய நார்சத்தும் உள்ளது.
அவகேடாவில் அதிகமாக ஒற்றை அபூர்தக் கொழுப்பு அமிலம் உள்ளதால் நல்ல கொழுப்பு அதிகம் ஆவதற்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.
இதில் குறைந்த அளவே பூரிதக் கொழுப்பு உள்ளது.
அவகேடாவில் நிறைய வைட்டமின்களும், தனிமங்களும் உள்ளன.
நம்முடைய உயிர் அணுக்கள் மற்றும் திசுக்களுக்கும் அத்தியாவசிய தேவையான ஃபோலேட் அதிகமாகவே உள்ளது.
எலும்பு ஆரோக்கியத்துக்கும், ரத்தம் உறைவதற்கும் தேவையான வைட்டமின் கே உள்ளது.
உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயத்தின் முறையான செயல்பாட்டுக்கும் உகந்த பொட்டாசியமும் உள்ளது.
இதில் இரும்புச் சத்தின் தன்மையை அதிகரிக்கவும், உடல் ஊக்கத்தை அளிக்கிற தாமிரமும் அதிகம் உள்ளது.
அவகேடாவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்றவையும் உள்ளது.
இதை மட்டும் இல்லாமல் மெக்னீசியம், மாங்கனிசு, பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி குறைந்த அளவில் உள்ளது.
முக்கியமாக அவகேடாவில் பைட்டோ, நியூட்ரியன்ட் உள்ளதால் எல்லா வகையான உடல் உபாதைகளையும் நீக்க சிறந்த கனி என்று சொல்லலாம்.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் அவகேடாவில் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.
இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் வயிறு மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு நல்லது.
இதில் கண்களைப் பாதுகாக்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்பு தேய்மானம் மற்றும் வலியை போக்குகிறது .
அவகேடாவில் மிகக் குறைந்த அளவிலேயே சர்க்கரை மற்றும் மாவு சத்து உள்ளதால் நீரழிவு நோய்க்கு மிகவும் சிறந்தது.
மிகக் குறைந்த சர்க்கரை உணவு வகைகளில் அட்டவணையில் அவகேடா பெரும் பங்கு வகிக்கிறது.
இதனால் நீரழிவு உள்ளவர்களின் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் காக்கிறது.
அவகேடா பழம் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும்.
பழம் வாங்கும் போது மிகவும் கடினமாகும் , மிகுந்த மென்மையாகவும் இல்லாமல் மிதமான அளவில் வாங்கி பயன்படுத்தும் போது தான் முழு ஊட்டுச் சத்தும் நமக்கு கிடைக்கும்.
அவகேடாவை அழகு சிகிச்சையிலும் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இப்பழத்தை சுடுவதால் அதில் எண்ணெய் வழியும் .
அதை சமையலுக்கும் ,ஒப்பனைக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் .
ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.