பிஸ்கட் பிறந்த கதை

பிஸ்கட் பிறந்த கதை 
பிஸ்கட்டை பிடிக்காத மனிதர்கள் உண்டோ? பிறந்து சில மாதங்களான குழந்தை முதல் வயதானவர்கள் வரை பிஸ்கட் என்றால் பிடிக்கும்தான்.

 சிலருக்கு சில வகை பிஸ்கட் பிடிக்காதே தவிர பிஸ்கட்டே பிடிக்காது என்பவர்கள் மிகவும் குறைவு.

 சாக்லேட்டை சாப்பிடாதீங்க எனும் மருத்துவர்கள் கூட பிஸ்கட்டை அளவாக சாப்பிடுங்க என்று அறிவுறுத்துவார்கள்.

 இப்படி சகல தரப்பினரின் அபிமானத்தையும் பெற்ற பிஸ்கட் உலகுக்கு வந்தது எப்படி?.

பிஸ்கட் என்றால் பிரெஞ்சு மொழியில் இரண்டு முறை சுட்டது என்று அர்த்தம்.

 ரொட்டியின் வேறொரு வடிவமாகவே பிஸ்கட்டை உருவாக்கினார்கள்.

 ஐரோப்பியர்கள் அந்த காலத்தில் அவர்கள் கப்பல் பயணம் செய்த போது டன் கணக்கில் பிஸ்கட்களை சுமந்து திரிந்து இருக்கிறார்கள்.

 பிஸ்கட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாதது என்பது இதற்கு காரணம்.

 அமெரிக்கர்கள் முதலில் பிஸ்கட்டை இன்ஸ்டன்ட் பிரட் அதாவது திடீர் ரொட்டி என்று அழைத்தனர் .

ரொட்டியை பேக்கிங் சோடா கலந்து தயாரித்தால் அது பிஸ்கட் என்பதான எளிய ரெசிபி முறை தான் அப்போது இருந்தது.

 முதல் உலகப்போரின் போது வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீண்ட நாட்கள் பிஸ்கட் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சுவையையும் முக்கியம் என்ற ஆலோசனையிலும் புதிய வகை பிஸ்கட்களை உருவாக்கினார்கள்.

 அதுதான் அன்ஸாக் ( Anazac) வகை பிஸ்கட்டுகள்.

 1877-ல் ஜான் பாமன் என்பவர்கள் முதன் முதலில் இயந்திரமூலம் பிஸ்கட் தயாரித்தார். 

இவர் தயாரித்த பிஸ்கட்கள் டீ கப்பில் சாஸர் வடிவத்தில் பெரியதாக இருந்தது.

 பிஸ்கட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்தான் என்றாலும் அதை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 பிஸ்கட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை பொருள் ஒட்டிக்கொள்ளும்.

 நிறைய பேர் பிஸ்கட் உடன் டீயும் அருந்துவதால் டீயில் உள்ள சர்க்கரையும் அதனோடு இணைந்து கொள்ளும்.

 அதனால் தான் அதிகம் பிஸ்கட் சாப்பிடுபவர்களின் பற்கள் கறை படிந்து காணப்படுகின்றன.

 இன்று சர்க்கரை நோயாளிகளுக்கான சுகர் ஃப்ரீ பிஸ்கட்கள் முதல் விதவிதமான பிஸ்கட்கள் சந்தைக்கு வந்துவிட்டன.
 அளவோடு சுவைத்தால் பிஸ்கட் போல் நம் வாழ்க்கையும் சுவைக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை