தூக்கம் காக்கும் பத்து வழிகள்
1. இரவு தூக்கம் தான் நல்லது பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்கு தூங்கலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்க கூடாது.
பகலில் தூக்கம் வரும்போது சிறிய நடை பயணம் செல்லுங்கள் .
ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள்.
உங்களுக்கு பிடித்தமானவருக்கு போன் செய்து பேசுங்கள் .
பகல் தூக்கத்தை தவிர்த்தாலே இரவில் நல்ல தூக்கம் வரும்.
2. இரண்டு அதிக தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்.
மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம்.
மிதமான தடிமன் உள்ள பருத்தியால் ஆன தலையணையை தேர்ந்தெடுங்கள்.
தலையணை முறையை அடிக்கடி மாற்றுங்கள்.
படுக்கை எப்பொழுதும் சுத்தமாக இருக்கட்டும்.
3. மூன்று இரவு மிதமான எளிதில் செரிமானமாக கூடிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரவு உணவுக்கு பின்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம்.
இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும் மூளையை பாதிக்கும்.
4. உடற்பயிற்சி செய்யும் போது உடல் முழுவதும் சோர்வு அடையும். அது நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.
5. எலக்ட்ரானிக் திரைகளில் இருந்து வெளியேறும் நீல வண்ண ஒளி உங்கள் தூக்கத்தை பாதிக்கும் இயல்புடையது.
எனவே தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே டிவி கம்ப்யூட்டர் டேப்லெட் செல்போனை அணைத்து விட வேண்டும்.
6. படுக்கை என்பது தூங்க மட்டுமே, என்கிற கொள்கையை பின்பற்றுங்கள்.
படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பது குழந்தையின் ஹோம் ஒர்க் செய்வது, டிவி பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
7. முதுகு வலி உள்ளவர்கள் காலுக்கு இடையே தலையணையை வைத்து தூங்க முயற்சிக்கலாம்.
இதனால் முதுகு வலியால் தூக்கம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
8. கழுத்தை சரியான நிலையில் வைத்து தூங்க வேண்டியது அவசியம்.
படுத்துக்கொண்டு டிவி பார்க்க கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும்.
முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டாம்.
9. புகையும், மதுவும் தூக்கத்தை மட்டுமல்ல உடல் நலத்தையே அழிக்கும் தீய பழக்கங்கள்.
மதுவின் போதையில் மயங்கி கிடப்பது தூக்கம் அல்ல.
மதுவால் ஆழமான தூக்கத்தை கொடுக்க முடியாது.
மேலும் புகையும், மதுவும் நரம்பு மண்டலத்தை பாதித்து ஆரோக்கியத்தை கெடுக்கும்.
10. உடலின் கடிகாரத்தை சீராக்குங்கள்.
சாப்பிடுவது, படுக்கைக்கு செல்வது எழுவது என அனைத்தையும் அன்றாடும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள்.
நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.