சருமத்திற்கு ஸ்கிரப் செய்தால் பலன்கள் கிடைக்கும்

சருமத்திற்கு ஸ்கிரப் செய்தால் பலன்கள் கிடைக்கும் 

முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று தெரியுமா? 

இன்றைய காலத்தில் முகப்பரு கரும் புள்ளிகள் கருவளையம் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்கும் முகத்தை காண்பது என்பது அரிதானது.

 அவற்றை நீக்குவதற்கு என்ன தான் அழகு நிலையங்களுக்கு சென்று வந்தாலும் சருமத்திலிருந்து அதை முழுவதும் நீங்கி விடுவதில்லை.

மேலும் எவ்வளவுதான் விலை உயர்ந்த அழகு பொருட்களை பயன்படுத்தி நாளும் இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைக்க பல நாட்கள் ஆகின்றன.

 எனவே அழகான முகத்தை இரண்டே நாட்களில் பெறுவதற்கு சில அழகான டிப்ஸ் இருக்கிறது.

 முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும் .

மேலும் வெளியே செல்வதற்கு முன்பும் வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவ வேண்டும்.

 இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றிவிடும்.

 அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால் சரும துளைகளில் அடைப்பு ஏற்பட்டு முகப்பருக்கள் வந்துவிடும்.

 ஆகவே குளிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

 முகத்தை சுத்தமான தூய்மையால் துடைக்க வேண்டும் .

அதிலும் அந்த துணி சூடான நீரில் நினைத்து பிழிந்து பின் துடைக்க வேண்டும் .

மேலும் அவ்வாறு செய்யும்போது அந்த துணியை நீரில் நனைத்து பிழிந்ததும் முகத்தில் வைத்து ஒரு நிமிடம் வைக்க வேண்டும்.

 இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் செய்தது போல் இருக்கும் இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும் .

முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது.

 அப்போது சூடான நீரை பயன்படுத்தக் கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.

கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக்கூடாது ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள் பாக்டீரியாக்கள் இருக்கும்.

 ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம்.

 சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்திற்கு ஸ்கிரப் செய்ய வேண்டும்.

 அதிலும் சர்க்கரை ஸ்கிரப் மிகவும் சிறந்தது .

அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சிறிது நீரை ஊற்றி கலந்து முகத்திற்கு ஸ்கிரப் செய்ய வேண்டும் .

பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் .
இதனால் சருமம் நன்கு சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை