குடும்பத்துடன் கூடிய இருப்பதே சொர்க்கம்
தொழில் முறை தனிமை என பல்வேறு காரணங்களால் கூட்டுக்குடும்பம் முறை சிதைந்து வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் புதுமணத் தம்பதி தனிக்குடித்தனம் போவது சகஜமாகிவிட்டது .
தாத்தா மடி அரட்டை, பாட்டியின் நிலா சோறு, அத்தைகளின் கதை என எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் இன்று காணாமல் போய்விட்டன.
அதனால்தான் கோபம் கட்டுப்பாடு இல்லை.
பொறுமை இல்லை என ஒரு விதமான மன நோய்களுக்கு ஆட்படுவது போல குழந்தைகளின் வாழ்க்கை மாறிவிட்டது.
அழிந்து போன சிட்டுக்குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து போய்விட்டது.
தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவு பெயர்கள் எல்லாம் மறைந்து கொண்டு இருக்கின்றன.
சித்தியும், அத்தையும் அனைவருக்கும் பொதுப்பெயர் ஆன்ட்டி தான்.
சித்தப்பாவோ, மாமாவோ அங்கிள் தான் பெயர்.
அதிலும் சித்தியை அன்னையாக பார்த்த தலைமுறைகள் கடந்துவிட்டன.
பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்று அழைத்த மரபுகளை கடத்தி கசின் என்று அழைக்க தொடங்கி விட்டோம் .
நாகரீக வார்த்தையில் அழைக்கும் நவீன யுகமாகி போனது என்று நம் கிளைகள் எங்கெங்கும் பரவினாலும் அதன் ஆணி வேர் குடும்பங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
தற்போது ஒரு விடுமுறை தினம் அப்பா whatsappபில், அம்மா போனில், பிள்ளைகள் பேஸ்புக்கில் மூழ்கி கிடைப்பது என்று ஆகிவிட்டது .
பணி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் உறங்கச் சொல்வதையும் வழக்கமாகி வருகிறது.
சந்தோஷமாக கூடி பேசுவது இல்லை.
குடும்பத்துடன் சுற்றுலா சென்றாலும் அதை அனுபவிக்காமல் செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போடுவதிலேயே குறியாக இருக்கிறோம் .
இந்த நிலை மாற வேண்டும்.
தனி குடித்தனம் இருந்தாலும் அடிக்கடி உறவுகளை சந்தித்து பேசுங்கள்.
தாத்தா , பாட்டிகளுடன் குழந்தைகளை கலந்து பழக விடலாம் அல்லது அவர்களை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து பொழுதை கழிக்கலாம்.
குடும்பத்துடன் கூடி கழித்து இருப்பதே சொர்க்கமான தருணங்கள் என்பதை உணர்வோம்.
வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் .
ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்.