சபாஷ் சப்போட்டா

சபாஷ் சப்போட்டா 
சப்போட்டாவில் உள்ள சத்துக்கள்

 வைட்டமின் சி மற்றும் ஏ நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ளன.

 மருத்துவ பயன்கள் 

சப்போட்டா பழத்தை அரைத்து சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி ஆகியவை நீங்கும்.

 சப்போட்டா பழம் ,வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும்.

 சப்போட்டா பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புண், குடல் எரிச்சல், வயிற்று வலி, வயிறு எரிச்சல் இவற்றைப் போக்கும்.

 சப்போட்டா பழத்தை தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

 சப்போட்டா பழத்தில் உள்ள சில சத்துப் பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களை சீராக வைக்கும் குணம் கொண்டவை .

இவை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது.

 சப்போட்டாவின் பயன்கள் 

சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவு நிரம்பியுள்ளதால் நமது கண்களுக்கு நன்மை தருவதுடன் முதுமையை தள்ளிப் போட வல்லது.

 நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல்.

 அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது.

 சப்போட்டா பழம் ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோசை கொண்டுள்ளது.

 சப்போட்டாவில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது .

அதாவது வாய் குழி, புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நஞ்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

 சப்போட்டா பழத்தை உண்ட பின் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்று மென்று விழுங்கினால் பித்தம் விலகும்.
 பித்தத்தை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக இது உதவுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை