கருவேப்பிலை இருக்க கவலை எதற்கு?
ரத்தச் சாேகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பு அணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும் .
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கருவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
கருவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமணி தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
கருவேப்பிலையை தினமும் உட்கொண்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காண்பதோடு முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளி தேக்கத்திலிருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
உஷ்ணம், அஜீரணம், வாயு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்தால் கருவேப்பிலையை சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து அத்துடன் அந்த அளவில் நான்கில் ஒரு பங்கு சீரகத்தையும் சேர்த்து வைத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும்.
மருந்து தின்ற அரை மணி நேரம் கழித்து தேக்கரண்டி அளவு சுத்தமான தேனையும் குடித்து விட வேண்டும்.
இந்த விதமாக காலை, மாலை இரு வேலையா சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
கறிவேப்பிலையை துவையலாக அரைத்து அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து அந்த சாற்றை அதில் சேர்த்துக் குழப்பி சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும் .
இந்த விதமாக பகல், இரவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பைத்தியம் தெரியும். அறிவு தெளிவடைந்து நன்றாக பேசுவார்கள்.
கோடைகாலத்தில் உஷ்ணம் காரணமாக கண் இழப்பையில் மேல் சிறிய கட்டிகள் கிளம்பும்.
இது சீல் கோர்த்து பெரியதாக மாறும் பொழுது அதிக கஷ்டத்தை கொடுக்கும்.
எனவே இந்த கட்டி ஆரம்பமான உடனேயே கருவேப்பிலையை தட்டி சாறு எடுத்து அந்த சாற்றை கொண்டு வெண்ணிற சங்கை உரைத்து அதை வழித்து கண்கட்டியின் மேல் கடமையாக பற்று போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்துவிடும் .
உடைந்த பின்னும் அதையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.
சீதபேதி மற்றும் வயிற்று வலி உள்ளவர்கள் கருவேப்பிலையை பச்சையாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் நோய் விரைவில் குணமாகும்.
ஜலதோஷம் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு இருந்தால் கருவேப்பிலியுடன் சிறிது மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.