30 வயது பெண்களா நீங்கள் ....
நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்
ரத்த அழுத்தம் மற்றும் இருதயம்
பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்றுதான் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது . மேலும் இருதய ஆரோக்கியத்தை பரிசோதித்து பார்ப்பது அவசியம்.
எலும்பு அடர்த்தி
பெண்களின் உடலில் வைட்டமின் சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும்.
இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
எனவே எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
பேப் ஸ்மியர் சோதனை
பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்று நோய்களில் ஒன்றுதான் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.
எனவே 30 வயதிற்கு மேல் எல்லா பெண்களும் நிச்சயம் பேப் ஸ்மியர் சோதனை செய்து ஆக வேண்டும்.
தைராய்டு பரிசோதனை
கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் ஆகும்.
எனவே 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.
சர்க்கரை நோய் பரிசோதனை
இன்றைய கால சூழ்நிலையில் 30 வயதை அடைந்து விட்டால் பெண்கள் நிச்சயம் நீரழிவு நோய் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
இதன் மூலம் வரும் காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுத்துக் கொள்ளலாம் .
மார்பக புற்றுநோய்
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை தடுக்க 30 வயதிலேயே மேமொகிராம் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.
ரத்த சோகை
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை பிரச்சனை ஏற்படக்கூடும்.
எனவே 20 வயதை அடைந்ததுமே ரத்த சோகை உள்ளதா? என்று ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து விடுவது மிகவும் பாதுகாப்பானதாகும்.