வாய் சுத்தமும் உடலின் நன்மையும்
அழகான புன்னகைக்கு வாய் சுத்தமாக இருக்க வேண்டும் .
வாய் சுத்தமாக இல்லை என்றால் பல் வலி மற்றும் பல நோய்கள் ஏற்படும்.
மூச்சு திணறல்
உங்கள் ஈறுகளில் பிரச்சனை என்றால் பாக்டீரியாக்கள் ரத்தம் மூலமாக நுரையீரலை அடைந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
அக்யூட் ப்ராங்காய்டிஸ் க்ரானிக் நிமோனியா ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இதய நோய் மற்றும் பக்கவாதம்
பல் பிரச்சனை உள்ளவர்களின் இதயம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.
பிளேக் மற்றும் பாக்டீரியா ஈறுகள் மூலம் உடலில் சென்று ரத்தக்குழாய்களில் அரிப்பை ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக் ஏற்படுத்துகிறது.
மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
டிமென்ஷியா
வாய் சுத்தமாக இல்லை என்றால் பற்களை இலக்க நேரிடும்.
இதனால் ஞாபகம் மறதி ஏற்படுவது உடன் மூளையின் சில பகுதிகள் பாதிப்படைகின்றன.
இதய தீவிர பிரச்சனைகள்
வாய் சுத்தமாக இல்லை என்றால் பல நோய்கள் ஏற்படலாம். மலட்டுத்தன்மை எரெக்டல் டிஸ்ஃபங்ஷன், குறை பிரசவம் ஆகியவை ஏற்படலாம்.
வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
வாயை சுத்தமாக வைக்க காலை, மாலை இரு முறை பிரஸ் செய்தால் மட்டும் போதாது.
வாருங்கள் சில எளிய முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்:
சரியாக பிரஸ் செய்தல்
பிரஸ் செய்யும் போது பிரஸ் ஈறுகளில் இருந்து 45 டிகிரியில் இருக்க வேண்டும்.
ஈறுகளும், பற்க்களும் பிரசை ஒட்டி இருக்க வேண்டும்.
பற்களின் முன்னும் பின்னும் மேலும் கீழும் பக்கவாட்டிலும் தேய்க்கவும்.
கடைசியில் நாக்கையும், மேல் அன்னத்தையும் சுத்தம் செய்யவும்.
வாயில் பாக்டீரியாக்கள் இல்லை என்றால் துர்நாற்றம் வராது.
நாளுக்கு இரண்டு முறை பிரஸ் செய்யவும்.
நன்றாக வாய் கொப்பளிக்கவும்
வாயில் உணவுப்பொருட்கள் சிக்கி இருந்தால் அதன் மூலம் பாக்டீரியாக்கள் பரவும்.
நாக்கை நன்கு சுத்தம் செய்யவும்.
தினமும் டங்க்ளினரால் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
வாயை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியாக்கள் உருவாகி வாய் துர்நாற்றம் வீசும்.
ஃப்ளாஸ்
ஃப்ளாஸ் உபயோகித்தால் பல் இடுக்குகளில் சிக்கி இருக்கும் உணவுப்பொருட்கள் வெளியேறும்.
இது பிரசால் வெளியே வராது.
தினமும் ஒரு முறை ஃப்ரஸ் பயன்படுத்தவும் மௌத் வாஸ், வெதுவெதுப்பான சலைன் வாட்டரால் வாய் கொப்பளிக்கவும் .
இதனால் வாயில் இருந்து பாக்டீரியாக்கள் வெளியேறும் .
வாய் துர்நாற்றம் நீங்கி பற்கள் உறுதியாகும் .
கால்சியம் மற்றும் வைட்டமின்களை சாப்பிடவும்
கால்சியம், பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான ஒன்று.
இதனால் பால் ஃபோர்டி ஃபைடு, ஆரஞ்சு சாறு, யாேகர்ட், ப்ரோக்கோலி, சீஸ் மற்றும் பால் பொருட்களை சாப்பிடவும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி பல் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கிறது.
வைட்டமின் பி, காம்ப்லெக்ஸ் பல்லியில் இருந்து ரத்தம் வடிவதை தடுக்கிறது.
காப்பர் சிங்கர் பொட்டாசியம் பற்களை சுத்தமாக வைக்க உதவுகிறது.
அளவாக காபி குடிக்கவும்
பானங்கல் வாயை சுத்தமாக வைக்கும்.
பாஸ்பரஸ் அதிகம் இருந்தாலும் அளவுக்கு அதிகமானால் கால்சியத்தை அழித்துவிடும்.
இதனால் பல் பிரச்சனை வரும்.
பால் சாப்பிடலாம்.
சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அருந்தலாம்.
புகையிலை வேண்டாம்
புகையிலை வாய் துர்நாற்றம் ஏற்படுவது உடன் பல நோய்களுக்கு காரணமாகும் .
நீங்கள் சிகரெட் பிடித்தால் அந்த வாய் நாற்றத்தை போக்க கேண்டி டீ அல்லது காபி சாப்பிடுவீர்கள் .
இதனால் பாதிப்பு இருமடங்கு ஆகும்.
உங்கள் ஈறுகளில் வலி , பிரஸ் செய்யும் போது ரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் ஆகியவை இருந்தால் உடனே டாக்டரை அணுகவும் .
வருடம் இருமுறை பல் டாக்டரிடம் செக்கப் செய்து கொள்ளவும்.
இதனால் ஏதாவது பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே சிகிச்சை செய்து கொள்ள முடியும்.