மணம் குறையா மகிழம் பூ
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பார்கள் .
மலர் என்றாலே மணம் தானே அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மனம் கொண்டவையாக இருக்கும் .
அதில் மகிழும் பூ வாசனைக்கு மயங்காதவர் உண்டோ?
மகிழம்பூ சூடுவதற்கு மட்டுமல்ல மருத்துவ குணங்களும் நிறைந்தது.
மகிழம் பூவில் மட்டும் பாஸ்பரசத்து, பீட்டா அமைரின், ஆல்ஃபா ஸ்பைனாே, ஸ்பிரால் பீட்டா, குளுக்காேசைட், பால் மடிக், ஒலியிக் அமிலங்கள் போன்ற நன்மை செய்யும் வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன .
மகிழம்பூ சந்தன நிறத்தில் இருக்கும்.
காய்ந்த உடன் ப்ரோ நிறத்தில் இருக்கும்.
மற்ற பூக்கள் எல்லாம் காய காய மணம் குறையும் இந்த பூவின் நறுமணம் அதிகரிக்கும் என்பது இப்போவின் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.
மகிழம் பூவை கசாயம் போல காய்ச்சி குடிக்கலாம் .
10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளர் அளவுக்கு வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
அந்த கசாயத்தை பருக ஒற்றை தலைவலி குறையும்.
பல் வலிக்கு மகிழம் பூவுடன் கிராம்பு சேர்த்து கசாயம் செய்து அருந்தலாம்.
மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும்.
தலை பாரமும் குறையும்.
மகிழம்பூ கசாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர உடல் வலிமை பெறும் உடல் வெப்பம் குறையும்.