சருமத்தை பொலிவாக்கும் பாலாடை மாஸ்க்

சருமத்தை பொலிவாக்கும் பாலாடை மாஸ்க் 
பெண்களின் சருமத்தை பாலாடையோடு ஒப்பிடுவது வழக்கம்.

 அத்தகைய மென்மையான பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு பாலாடை உபயோகிக்கலாம்.

 பாலில் இருக்கும் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கு உதவுகிறது .

அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்பொழுதும் புது பொலிவுடன் இருக்கும்.

 பாலாடையை சருமத்தில் பூசுவதன் மூலம் திசுக்களில் தேங்கி இருக்கும் முகப்பருவை உருவாக்கும் கிருமிகளை நீங்கும்.

 பால் ஆடையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவினால் பேசியல் செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்.

 வறண்ட சருமம் கொண்டவர்கள் பால் ஆடையை அவ்வப்போது தடவி வந்தால் சர்வ வறட்சி நீங்கி இருப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.

 எண்ணெய் தன்மை கொண்ட சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது பயிர் கலந்து மாசுக்கு போன்று பயன்படுத்தலாம்.

 பாலாடையை அப்படியே உபயோகிக்காமல் சிறிது நேரம் குளிர்பதனை பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் சருமத்தில் பெரிய அளவில் இருக்கும் துவாரங்கள் சிறிதாகும்.

 முகத்தில் எந்த மாசமும் சேரவிடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும் .

பாலாடை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் மாஸ்கள்

 பாலாடை மற்றும் மஞ்சள்

 ஒரு டீஸ்பூன் பாலாடையுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 இந்த கலவையை முகம் முழுவதும் பூசி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும் .

பாலாடை மற்றும் கற்றாழை ஜெல் 

2 டீஸ்பூன் பாலாடையுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும்.

 இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவும்.

 பாலாடை மற்றும் தேன் 

ஒரு டீஸ்பூன் பாலாடையுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும் .
இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை