நோய்களை விரட்டும் கற்பூரவல்லி
இதன் இலைகள் மென்மையாக இருக்கும்.
இதனை பச்சையாக மெல்லும் போது இதன் சாறு லேசான காரமும் சிறு கசப்பு சுவையும் கொண்டது.
கற்பூரவள்ளியை பச்சையாக கூட சாப்பிடலாம் .
அவ்வளவு மருத்துவ குணம் நிறைந்தது.
அந்த வகையில் இதன் நூல் அடங்கி உள்ள மருத்துவ நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு பொழிந்து இதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.
கற்பூரவள்ளி இலைகள் அரைத்து அதன் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உட்கொண்டால் சளி தொல்லை தீரும்.
காசநோய், கபக்கட்டு, அம்மை கொப்பளம் ஆகியவைகளை கட்டுப்படுத்தும் தன்மையை கற்பூரவல்லிக்கு உண்டு.
இலைகளை தண்ணீரில் இட்டு ஆவி பிடித்தாலும் நெஞ்சு சளி குணமாகும்.
கற்பூரவள்ளி சூப் செய்ய கற்பூரவள்ளி இலைகள் 5, மிளகு 5, வெற்றிலை எடுத்து சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த நீரை காலை மாலை பருகிவர ஜலதோஷம் நீங்கும்.
குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர சளி, ஆஸ்துமா , காசநோய் அண்டாது.
கற்பூரவள்ளி இலைகளின் சாறை ஒரு டம்ளர் அளவு எடுத்து சுண்டக்காய்ச்சி பாதி அளவு ஆக்கி வடிகட்டி அருந்தி வந்தால் புகை பிடிப்பதால் நுரையீரல் தங்கி இருக்கும் நச்சுக்கள் மாசுக்கள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் சாற்றை நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் சூடு பறக்க தெரிந்தால் சளியினால் ஏற்படும் காய்ச்சல் நீங்கும்.
கற்பூரவள்ளி இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது.
இது சிறுநீரகங்களில் அதிக அளவு சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களை காக்கிறது.